பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரண நம்பி 217 பிவிருக்கும்போது அவர் எங்ங்னே திருநாவாய்க்குச் செல்ல முடியும்? எனவே, இருந்த இடத்திலிருந்து கொண்டே மனோரத்திக்கின்றார். அந்த மனோரதமே நாவாய் உறையும் நாரண நம்பி மேல் திருவாய்மொழியாகப் பரிண மிக்கின்றது. திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது மீண்டவுடன் பெருமானைக் கிட்டுவதற்கு முன்பு. பிராட்டிக்குப் பிறந்த மனோரதம் போலே, கீழ்விட்ட தூதர் அவ்விடத்தை படைந்து அவனைக் கொண்டு வருவதற்கு முன்னே இடையில் இவர்க்குப் பிறந்த மனோரத்தைச் சொல்லுகிறது' என்பது சடு. இதனையும் நினைத்து இப் பதிகத்திலே ஆழங்கால் பட்ட நாம் அந்த பெருமானைச் சேவிக்க ஆசைப்படுகின்றோம். திருநாவாய் என்ற திவ்விய தேசம் தென்னிந்தி இருப்புப் பாதையில் ஷோரனூர்-மங்களுர் வழியில் ஷோரனூரிலிருந்து சுமார் இருபத்தைந்து கல் தொலைவி லுள்ள ஓர் ஊர். அதிகாலையில் நீராடி, தூய ஆடையை உடுத்திக் கொண்டு திருநாவாய்க்குப் போகத் தயாராகின் றோம். சுமார் ஏழரை மணிக்கு ஷோரனூர் நிலையத்திற்கு வந்து வண்டி ஏறுகின்றோம், விரைவு வண்டி இல்லை யாதலின் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று செல்லு கின்றது வண்டி. இயற்கை வனப்புகளும் வளங்களும் நிறைந்த மலைநாடாதலின் இருப்புப் பாதையின் இருபுறமு முள்ள தோப்புக்கள், சோலைகள், வயல்கள் இவற்றைக் கண்டுகளித்துக் கொண்டே செல்லுகின்றோம். திருவித்துவக் கோடு செல்லும்போது பாரதப் புழா என்ற ஆற்றைப் பற்றிக் குறுப்பிட்டோமல்லவா? அப்போது அந்த ஆறு நம் முடனேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த 3. திருவாய் 9, 8 (உரை அவதாரிகை ஈடு காண்க)