பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மலைநாட்டுத் திருப்பதிகள் ஆற்றையே இப்போதும் சந்திக்கின்றோம். ஆனால் ஆறு இப்போது நாம் செல்லும் திசையிலிருந்து வந்து கொண்டி ருப்பதைக் காண்கின்றோம். பட்டாம்பி என்ற நிலையத் திற்கு அருகே வண்டி வருங்கால், பாரத புழா என்ற ஆறும், அதன் அக்கரையிலுள்ள திருவித்துவக் கோட்டம் மான் இருக்கோயிலும் தென்படுகின்றன. வண்டியிலிருந்த வண்ணம் அந்த அம்மானுக்கு ஒரு கும்பிடு போடுகின் றோம். சுமார் ஒன்றரை மணிநேரத்தில் திருநாவாய் என்ற நிலையத்திற்கு வந்து சேர்கின்றோம். நிலையத்திலிருந்து திருநாவாய் என்ற ஊர் ஒன்றரைக் கல் தொலைவிலுள்ளது வண்டியொன்றும் கிடைப்பதில்லை. சில சமயம் பேருந்து கிடைக்கும். நாம் அதனை எதிர்பார்க்கத் தேவையில்லை நடராஜா சர்வீஸில் ஆனந்தமாக நடந்து செல்லலாம். சிறு சாலையின் வழியே நடந்து செல்லும் போதே இருபுறமும் பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற நெல் வயல் காட்சிகளைக் கண்டுகளித்துக் கொண்டே நடந்து போகின்றோம். சுமார் முக்கால் மணி நேரத்திற்குள் நாரண நம்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை நண்ணுகின் றோம். சாலையிலிருந்து சாலைக்கு உட்புறமாகச் சுமார் நூறு கெஜ தூரத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. சாலையிலிருந்து கோயிலுக்கு இட்டுச்செல்லும் குறுக்குப் பாதையின் இருபுறமும் சோலைகளையும் நந்தவனங் களையும் நாம் காணும்போது அடிமைசெய்ய வேண்டும்’ என்து பாரித்த ஆழ்வாரின் நினைவு வருகின்றது . அவருடைய உணர்ச்சி நப மையும் பற்றுகின்றது. இதனால், தான் வெறிந்தண்மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்' , சோலைகள் சூழ் திருநாவாய்' நீள் ஆர் மலைச் சோலைகள் சூழ் திருநாவாய்', வண்டு ஆர் 4 திருவாய் 9.8 : 1. 5. டிெ 9, 8, 2 தி. டிெ 9, 8: