பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரண நம்பி 219 மலைச் சோலைகள் சூழ் திருநாவாய்', கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்' என்று நம்மாழ்வார் இவ்வூரைச் சுட்டியுரைத்தனரோ என்று எண்ணுகின்றோம். * எம்பெருமானுக்கு அடிமை செய்வதற்குப் பூக்கள் முதலிய துணைப் பொருள்கட்குத் தட்டுப்பாடில்லாத திவ்விய தேசம் அன்றோ இது!’ என்று எண்ணவும் செய்கின்றோம். திருக் கோயில் பாரதப் புழா என்ற ஆற்றங்கரையின் மேல் அமைந் துள்ளது. இவ்வூர் வழியே வரும் ஆறுதான் திருவித்துவக் கோட்டை நோக்கிச் செல்லுகின்றது, இந்தத் திருக்கோயில் எம்பெருமானை நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வாரும் மங்களா சாசனம் செய்துள்ளனர். என்றாலும், நம்மாழ்வார் ஒரு பதிகத்தால் இத்திருக் கோயில் எம்பெருமானைப் பாடி அநுபவிக்கின்றார்: அதுவும் தலைவியாக இருந்து அநுபவிக்கின்றார்". திருமங்கையாழ் வார் நறையூர் நம்பியைப் பாடி அநுபவிக்கும் போது இந்தத் திவ்விய தேச எம்பெருமானையும் நினைவு கொள்ளுகின்றார்: நாவாய் உறையும் நம்பியையே நறையூர் நம்பியாகக் கண்டு களிக்கின்றார். அவர் கண்ட காட்சியை, துவாய புள்ளுர்ந்து வந்து, துறைவேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை, தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை' நாவாய் உளானை நறையூரில் கண்டேனே' (புள்-கருடன், வேழம்-யானை: மூவாமை-துன்புறாமை: துணித்தானை இரு துண்டாக்கியவனை.) 7. திருவாய் 9. 8: 6 8. ഞു. 9.8 10 9, 6 ැg. 9. 8. 19. பெரி திரு 6, 8, 3.