பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ot, மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற பாசுரத்தில் காணலாம். பரமபத தாதன் திருநாவாயில் வந்து குடி கொண்டிருந்தான் அவனே திருநறையூரில் வந்து சேவை சாதிக்கின்றான் என்கின்றார் ஆழ்வ்ார். பிறி தோரிடத்தில் பதினெண் திருப்பதிகளை மங்களாசாசனம் செய்யும்போது நாவாய் நம்பியை நினைவு கூர்கின்றார். "கம். மாகளிறு அஞ்சிக் கலங்க, ஒர் கொம்பு கொண்ட குாைகழல் கூத்தனை கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே’** என்பது பாசுரம், குவலயாபீடம் என்ற மதயானையின் கொம்பைப் பறித்த பெருமான் ஆழ்வாருக்குத் திருக்கோட்டி யூரில் சேவை சாதித்தார்; அவரைத் திருநாவாயில் கான ஆசைப் படுகின்றார் ஆழ்வார். இந்த இரண்டு பாசுரங் களாலும் திருமங்கையாழ்வார் இத் திருப்பதிக்கு நேரில் வந்த சேவித்தாகப் புலப்பட வில்லை. நம்மாழ்வார் தலைவி பாசுரமாகப் பாடியிருப்பதால் அவர் இத்திருக் கோவிலுக்கு வரவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. திருவாய் மொழி அந்தாதி முறையில் அமைந்திருப்பதால் எல்லாம் பாடல்களையும் ஓரிடத்திலிருந்து கொண்டு பாடியிருத்தல் வேண்டும் என்று பிறிதோரிடத்தில் குறிப்பிட்டுள்ளோம். அப்படிப் பாடும்பொழுது இத்திருக்கோயில் எம்பெரு மானைப் பாடுங்கால் தலைவிப் பாசுரமாக திருவாய் மொழியை அமைத்து மகிழ்ந்தார் என்று கொள்ளலே ஏற்புடைத்தாகும். இந்த எண்ணங்களுடன் திருக்கோயிலின் சந்திதியை அடைகின்றோம். நம்மாழ்வார் பெற்ற அநுபவத்தை 11. பெரி திரு 10. 1:9