பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் உறையும் நாரணநம்பி 22. நாமும் பெற்று நாவாய் அப்பனைச் சேவிக்கின்றோம். அந்த எம்பெருமானின் பேரருளுக்கு நாம் பாத்திரமாக வேண்டும் என்று துடித்து நிற்கின்றோம். திருநாவாய் என்னும் திவ்விய தேசத்தில் எம்பெருமானின் பேரருள் விளங்கும் என்று ஆசாரிய ஹிருதயம் குறிப்பிடுகின்றதன்றோ? 'பிரிந்த துன்பக்கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ஸ்யம், நாவாயிலே நிழல் எழும்’’’ என்பது ஆசாரிய ஹிருதய சூத்திரம், விஷ்ணு போதம், விஷ்ணுவாகிய ஒடம்; ஆந்ரு சம்ஸ்யம் - அடியார்கட்குச் செய்யும் அருள். அவன் நித்திய வாசம் செய்கின்ற திருநா வாயிலே’, உள்ளே உறைகின்ற அவனது தன்மையும் இதுவோ என்று அறியலாம்படி அவ்வூரின் பெயராலே நிழல் என்று குறிப்பிடப்படலாயிற்று. நம்வாழ்வார், 'நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ! ஆஆ. அடியேன் இவன் என்று அருளாயே’’’ (ஆஆ. ஐயோ அடியான்-அடிமை; அருளாய் கருணை காட்டுவாய்.) என்று வேண்டுகின்றனரன்றோ? இதனை நினைந்தே ஆசாரிய ஹிருதயம் அவ்வூர் எம்பெருமானின் தன்மையைக் குறிப்பிட்டது என்பது அறியத்தக்கது. கடப்பதற்கு உறுப்பாக இருப்பது கப்பல்; நாவாய். அங்ங்ணமே பிரிந்த துன்பக் கடலைக் கடப்பதற்கு இத்தலத்து எம்பெருமானும் நாவாய். போன்று இருப்பதால், அவன் எழுந்தருளியுள்ள தலமும் 'நாவாய் என்ற பெயரால் வழங்கலாயிற்று. திரு' என்ற 12. ஆசா. ஹிரு 180 13. திருவாய் 9.8 : !