பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராய் உறையும் நாரண நம்பி 223 டிருந்த மலையாளர்களை நோக்கி திருநாவாய் எவ்வளவு துரமுண்டு?" என்று வினவினார். அவர்கள் குறுக்கும்’ என்றார்கள்; அண்மையில் உள்ளது என்பது இதன் பொருள். எம்பெருமானார் அதனைக் கேட்டு இப்பகுதி மொழியாலே யன்றோ அருளிச் செய்துள்ளார் ஆழ்வார்!’ என்று பாசுரத் தில் மிகவும் ஈடுபட்டதாக வரலாறு ஒன்று உண்டு. அதனை ஈண்டு நினைவு கூர்ந்து நாமும் பாடலில் தோய்ந்து அநுபவவிக்கின்றோம். 'அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்தொன்றிய சிந்தையினார்க்கு’’’ (அறுக்கும்-போக்கும்; ஆகத்து-உள்ளத்தில்; ஒன்றிய. ஒருமைப்பாடுடைய..! என்பது பாசுரத்தின் முதலிரண்டு அடிகள். அப்பொழு தைக்கு அப்பொழுது ஆராவமுதாக இருக்கும் எம்பெருமா னைத் தங்கள் உள்ளத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை உடையவர்கட்கு திருநாவாய் அண்மைக்கு வரும்படியான உபாய முண்டோ என்பது பராங்குச நாயகியின் எண்ணம். வினையாயின என்பத னால் விரோதிகளைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். அந்த விரோதிகள் சொரூப விரோதி, உபாய விரோதி பிராப்பிய விரோதி என்று திருமந்திரப் பொருளில் கூறப்பெறும் மூன்று விரோதிகளாகும். இவற்றைத் தவிர சஞ்சிதம், பிராரப்தம் போன்ற வினைத் தொகுதிகளும் உள்ளன. இவை யனைத்தும் அடங்கியவையே வினையாயின வாகும். எம் பெருமானை உள்ளத்தில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள 17. திருவாய் 9,8 :1 18. முமுட்சுப்படி-83, 84,85