பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 4}. திருவனந்தபுரத் திருக்கோயிலில் தமிழ்ப் பண்பாடும் கலந்து மிளிர்கின்றது, ஒற்றைக்கல் மண்டபத்திலிருந்துகொண்டு மூன்று திருவாயில்கள் மூலமாகவும் தெற்கு நோக்கிச் சாய்ந்த திருவ பிடேகமும் வடக்கு நோக்கி நீட்டிய திருவடிகளையும் கொண்டு கிழக்கு நோக்கிய நிலையில் அனந்தன்மீது பள்ளி கொண்டுள்ள அனத்தடது.மதாபனைக் கண்ணாரக் கண்டு சேவிக்கின்றோம். அனந்தபுரத்து அண்ணலாரின் திரு வருளுக்குப் பாத்திரமாகின்றோம். பாதாதி கேசமாக அனந்த புரநகர் ஆதியை"ச் சேவித்த நாம் திருவரங்கத்து அமுதினைச் சேவித்த திருப்பாணாழ்வாரின் அதுபவ நிலையைப் பெறு கின்றோம். 'என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றி னைக் கானாவே'." இந்த அநுபவத்துடன் திரும்பும் நாம் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாசுரத்தையும் நினைவு கூர்கின்றோம். 'கோள்ஆர் பொறி ஐந்தும் குன்றி, உட லம்பழுத்து, மாளாமுன் நெஞ்சே! வணங்குதியால்-கேளார் சினந்தபுரம் சுட்டான், திசைமுகத்தான் போற்றும் அனந்தபுரம் சேர்ந்தான் அடி’** |கேளார் சினந்தபுரம் சுட்டான்-சிவன்: திசைமுகத் தான்-நான்முகன்.) 39. திருவாய் 10.2 : 11 40. அமலனா. 10. 41. நூற். திருஅந்தாதி. 59. —4–