பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மலைநாட்டுத் திருப்பதிகள் (தலைக்கு மேலுள்ள கூரையில்) ஒன்பது கோள்களும் பொறிக்கப்பெற்றுள்ளன. இவற்றை யெல்றாம் கண்டு களித்த வண்ணம் வலம் வருங்கால் ஆசாரியர் காலத்து நிகழ்ச்சியொன்று நம் நினைவிற்கு வருகின்றது. ஒரு சமயம் பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் இங்ஙனம் கண்டுகளித்த வண்ணம் வலம் வந்து கொண்டிருந்தனர். வேறு பக்தர்கள் எதனையும் கவனியாது மிக விரைவாக வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த இருவர் மட்டிலும் திருமாளிகைகளையும், திருக் கோபுரங்களையும, பிறவற்றையும் பருகுவன்ன அருகா நோக்க மொடு பார்த்துக்கொண்டு வந்ததைக்கண்ட நஞ்சீயர் அல்லாதார்கட்கும் இவர்கட்கும் செயல் ஒத்தி ருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என்? என்று இருந்தேன்” என்று அருளிச் செய்துள்ளார்." இந்நிகழ்ச்சி நினைவுடன் கருவறையை அடைகின்றோம். கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தின் அடித்தளக் கருங்கல் 20 அடி சதுரத்தைக் கொண்டது: கல்லின் கனம் இரண்டரை அடி. இது கி. பி. 1731இல் நிறுவப்பெற்றது. இந்த மண்டபம் ஒ ற் ைற க் க ல் பண்டபம் என்றே வழங்கப் பெறுகின்றது. திருவாட்டாற்று திருக்கோயிலும் இத்தகைய அடித்தளக் கல்லையுடைய மண்டபத்தைக் கண்டோம். கிட்டத்தட்ட இரண்டு கோயில் களும் ஒரே மாதிரி அமைப்பினைக் கொண்டனவாயினும் சிற்பங்கள் முதலியவற்றை நோக்கத் திருவாட்டாற்றுக் கோயில் பழமையுடைய தெனத் தோன்றுகின்றது. அங்குப் பெரும்பாலும் கேரள நாட்டுப்பாணி மீதூர்ந்து நிற்கின்றது. 38. திருவாய் 10.2:2 (ஈட்டின் தமிழாக்கம் காண்க).