பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 47 கோபுரத்திலும், மண்டபங்களிலும், தூண்களிலும் பல்வேறு சிற்பங்களைக் காணலாம். இவை யாவும் தென்னிந்தியச் சிற்பங்களே. நுழைவாயிலிலுள்ள இராஜ கோபுரம் சற்றேறக் குறைய 100 அடி உயரம் உள்ளது; ஏழு நிலைகளைக் கொண்டது. கம்பீரமாக நின்று தொலை விலுள்ளவர்களையும் ஈர்க்குந்தன்மையது. கேரள நாட்டி லேயே இத்திருப்பதியின் திருக்கோயிலில் மட்டிலுமே தமிழகச் சிற்பங்களைக் காணலாம். இக்கோபுரத்தின் அடிக்கல் நாட்டு விழா கி. பி. 1566இல் நடைபெற்றது; கோபுரத் திருப்பணி நிறைவுபெற்றது. கி. பி. 1604இல், கோயிலினுள் காணப்பெறும் பொன் வேய்ந்த கொடிமரம் கி.பி. 1565இல் நிறுவப்பெற்றதாக அறியக் கிடக்கின்றது. திருவாட்டாற்றுக் கோயிலுள்ளது போலவே கோயிலைச் சுற்றிய பிராகாரத்தில் திருச்சுற்றில் ஆயிரக்கணக்கான பித்தளை விளக்குகள் பொருத்தப் பெற்றுள்ளன. திருவிழாக் காலங்களில் இவை ஏற்றப்பெற்று விழாவிற்குப் பொலிவினை யும் கவர்ச்சியினையும் நல்கும். கோயில் உள்சுற்றில் (உட்பிராகாரம்) கண்ணன் (கிருட்டிணன்), ஐயப்பன், நரசிம்மன், சிவபெருமான், ஆனை முகன், இலக்குவனுடன் சேர்ந்த சீதாராமன் இவர்கட்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்த மூர்த்திகளையெல்லாம் வணங்கிக் கொண்டு திருக்கோயிலை வலம் வருகின்றோம். குலசேகர மண்டபம் என்றும், ஆயிரக்கால் மண்டபம் என்றும் வழங்கப்பெறும் மண்டபத்தில் கண்ணைக் கவரும் கருங்கல், சிற்பங்களைக் காணலாம். இவை யாவும் 18-வது நூற் றாண்டில் நிறுவப்பெற்றவையாகும். பலிபீட மண்டபத் திலும் இந்து சமயத்தினர் வழிபடும் பல்வேறு கடவுளர்களின் அழகிய சிலைகள் அணி செய்கின்றன. கண்ணன் சந்நிதிக்கு முன்னருள்ள நவக்கிரக மண்டபத்தின் நெற்றிக் கண்ணில்