பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மலைநாட்டுத் திருப்பதிகள் அப்பதியில் எழுந்தருளியிருந்தார். இந்நிலையில் குருகைக் காவலப்பர் எழுதித் தந்த திருக்குறிப்பைப் பார்க்க அந்நாளே அவர் குறிப்பிட்ட நாளாக இருந்தது. "ஐயோ, நாம் எங்கும் நினைத்தவுடன் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திரு வடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். இவ்விடத் தினின்றும் குருகைக் காவலப்பர் எழுந்தருளியிருக்கும் இடத்தை எங்ங்னம் அடைவது?’ என்று வருந்தினராம். இக்கருத்துகள் எல்லாம் திருவனந்தபுரத்தை அடையும் நம் மனத்தில் குமிழியிட்டுக் கொண்டிருக்க நாம் செல்லும் பேருந்தும் நிலையத்தை அடைகின்றது. திருவனந்தபுரத்தில் இருப்பூர்தி நிலையமும் பேருந்து நிலையமும் எதிரெதிராக மிக அருகிலுள்ளன. அந்தப் பக்கத்திலேயே உணவு விடுதி களும் தங்கும் விடுதிகளும் உள்ளன. நல்ல விடுதியில் தங்க இடம் அமர்த்திக்கொண்டு அங்குத் தங்குகின்றோம். அங்கிருந்து திருக்கோயில் அரை மைல் தொலைவில் உள்ளது. நடந்தே சென்று வரலாம். அதிகாலையில் நன்னீராடித் தூய ஆடையை உடுத்திக் கொண்டு திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். நம்மாழ்வார் பாசுரங்கள் ய ா வு ம் நம்மனத்தே எழுந்தவண்ணம் உள்ளன. திருக்கோயில் திருவாட்டாற்றுத் திருக்கோயில் போலவே சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிகள் ஏறியே கோயிலினுள் நுழைதல் வேண்டும். கோயிலுக்கருகில் சந்நிதித் தெருவின் ஒரு புறமாக அமைந்துள்ள திருக் குளத்தில் கைகால்களைத் தூய்மை செய்து கொண்டு திருக் கோயிலுனுள் நுழைகின்றோம். கோயின் நாற்புறமும் கனமான கோட்டைச் சுவர்கள் சூழ்ந்துள்ளன. திருக் கோயிலுக் கருகிலேயே திருவாங்கூர் அரசரின் அரண்மனை யும் உள் ளது. அவர் அரண்மனையிலிருந்து திருக்கோயிலுக்கு வந்து போவதற்குத் தனிச் சுரங்க வழி உண்டு. அதையும் காண்கின்றோம். -- - ----