பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 45. திருநாபி, திருவடி என்னும் இவற்றை மூன்று திருவாசல் களாலே சேவிக்க வேண்டும் என்பது தெளிவுபடுத்தப் பெற்றுள்ளது. - திருவனந்தபுரத்தில் அரவணையின் மீது பள்ளி கொண் டுள்ள எம்பெருமானைக் காணப்புறப்படுமாறு நம்மை யெல்லாம் சேரவாரும் செகத்தீரே என்பது போன்ற குரல் கொடுத்து அழைகின்றார் ஆழ்வார். "படமுடை அரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்(கு) அறியச்சொன்னோம்’’’ (அரவு - பாம்பு; காண சேவிக்க நடமின் - நடவுங்கள்) என்பது ஆழ்வாரின் குரல். இப்பாசுரப்பகுதியைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு எல்லாச் சாத்திரங்களையும் உபதேசித்து, யோக ரகசியத்தை மட்டிலும் குருகைக் காவலப்பரிடம் பெறுமாறு பணித்தனர். ஆளவந்தார் பின்னர் அவர்பாற் சென்று கேட்டுக்கொள் வதாக எண்ணியிருந்தார். பின்னர் ஒருநாள் அவர் குருகைக் காவலப்பரை அண்மிக் கேட்டதற்கு அவரும் தமது திரியான காலத்தில் சொல்லுவதாக எழுதித் தந்து அந்த நாளையும் குறிப்பிட்டிருந்தனர். இஃதிங்ங்ணம் இருக்கத் திருவரங்கத்தில் திருவாய்மொழி - திருமொழித் திருநாள் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. திருவரங்கப் பெருமாளரையர் ஆனந்தமாகத் திருவாய்மொழியை ஒதிக் கொண்டிருந்தார், குழுவில் இருந்த ஆளவந்தாரின் திருமுகத்தை நோக்கிக் கொண்டே மேற்கண்ட பாசுரத்தை அநுசந்தித்தார். ஆளவந்தாரும் இது திருவரங்கநாதன் திருவருள் என்று எண்ணி அப்பொழுதே அளவற்ற அடியார் குழுவுடன் திருவனந்தபுரம் சென்று அனந்தபதுமநாபனைச் சேவித்து 37. திருவாய் 10.2 : 8.