பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 மலைநாட்டுத் திருப்பதிகள் கின்றார் (மலைநாட்டு வழக்கு); அகப்பணி அந்தரங்கத் தொண்டு: விண்ணோர் - நித்தியசூரிகள்: நமர் - நம்முடை யவர்; நணுக - அடைய, சேர.) என்று கூறும் அவரது திருவாக்கைக் காண்க. நித்திய சூரிகளும், நான்முகன் முதலிய தேவர்களும், நம்போலியரும் வழிபடுவதற்கென்றே அந்த எம்பெருமான் மூன்று திருவாயில் களை அமைத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றான். முக்தர்கள் திருமுகத்திற்கு நேராகவுள்ள வாயிலின் முன் நின்றும், அரன் அயன் முதலிய தேவர்கள் திருநாபிக்கு நேராகவுள்ள வாயிலின் முன் நின்றும், நமபோலியர் கிடைத்தற்கரிய திருவடிக்கு நேரேயுள்ள வாயிலின் முன் நின்றும் வழிபடல் வேண்டும். இன்றும் அத்தகைய அமைப் பினைக் கருவறையில் காணலாம். இந்தத் திவ்வியதேசத்தின் திருக்குணத்தை, "ஸ்லைன்ய புத்ர சிஷ்ய ஸாத்ய சித்த பூசிர அர்ச்சனத் துக்கு, முகநாபி பாதங்களைத் துவாரத்ரயத்தாலே காட்டும் லாம்யம் அநந்த சயனத்திலே வியக்தம் 35 இதுவாரத்ரயம் - மூன்று திருவாசல்கள்; புத்ரன் - பிரமன் சிஷ்யர் - ஆழ்வாருடைய சிஷ்யர்கள்; பூசுரர் - நிலத்தேவர், வியக்தம் - தெளிவு) 冷 என்று கூறும் ஆசாரிய ஹிருதயம். இத்திருக்குணம் சாம்யம்’ என்பதாகும். சாம்யம் - வேறுபாடு கருதாது ஒரே தன்மை யாகப் பார்க்கும் குணம். இச்சூத்திரத்தில் திருமுகம், 35. ஆசா. ஹிரு-குத்திரம் 183. துவாரத்திரயம்-மூன்று திருவாயில்கள். 35. திருவாய். 10:26, 8. (இதன் விளக்கத்தை ஆசா ஹிரு.பகுதி 3.4 (பக் 439)'காண்க. (சென்னைப் பல்கன்லக் கழக வெளியீடு - 1965)