பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 43 என்று கூறுவது காண்க. எம்பெருமானுக்கு ஏதோ ஒரு வகையில் எந்த விதமான அடிமைத் தொழில் புரியினும் கொடிய பாவங்கள் யாவும் மாய்ந்தொழிந்து போகும் என்பது ஆழ்வாருடைய கருத்து. "பண்டைநா ளாலே நின்திரு வருளும் பங்கயத் தாள்திரு வருளும் கொண்டு,நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும் தொண்டர்" (பங்கயத்தாள் - பெரிய பிராட்டியார்; குடிகுடி வழி அநாதி காலமாக: ஆள் செய்தல் - அடிமை செய்தல்.) என்ற பாசுரப் பகுதியும் ஈண்டு சிந்திக்கத் தக்கது. திருவனந்தபுரம் என்ற திவ்விய தேசம் சாதாரண மானதன்று. அது அயர்வறும் அமரர்களும் வந்து அடிமை செய்யும் இடமாதலின் திருநாட்டைக் காட்டிலும் ஏற்றம் பெற்றதாகும். அமரர்களின் தலைவரான சேனை முதவியார் வந்து வழிபடுதலால் அவருடன் நித்திய சூரிகளும் வந்து அந்தரங்கமான பணி விடை செய்கின்றனர். ஆகவே "நாமும் அங்கு சென்று கைங்கரிய பரர்களாக வேண்டும்' என்று நம்மையெல்லாம் தூண்டுகின்றார் ஆழ்வார். 'அமரராய்த் திரிகின்றார்கட்(கு) ஆதிசேர் அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்று; அங்(கு) அகப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ சொல்லக்கேண்மின்; நாமும்போய் நணுகவேண்டும்' (அமரர் - தேவர்; அமரர்கோன் - நித்திய சூரிகளின் தலைவர் சேனை முதலியார்; அர்ச்சிக்கின்று அருச்சிக் 33. திருவாய் 9.2:1. ് .കൂ 10.2:6.