பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மலைநாட்டுத் திருப்பதிகள் இவற்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்மையெல்லாம் துண்டுகின்றார் ஆழ்வார். 'துரமம்நல் விரைமலர்கள் துவன் அற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள்தாமே’’’’ (துாமம் - தூபம்; விரை - மணம்; துவள் - குற்றம்) என்றும், 'சாந்தொடு விளக்கம்துTபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார் அந்தமில் புகழினாரே' (சாந்து - சந்தனம்; ஆய்ந்து தேர்ந்து; ஏத்துதல் - துதித்தல்) என்றும் அவர் கூறுவதைக் காண்மின். இங்ங்ணம் அந்த எம்பெருமானைத் துதித்தவுடனே நம்முடைய வினைகள் யாவும் தொலைந்து போகும்; அழிவில்லாத புகழும் நம்மை வந்தடையும். நாமும் 'விண்ணுளாரிலும் சீரியர்' ஆவோம். - மேற் சொன்னவாறு மலர்கள் முதலியவற்றுடன் எம் பெருமானுக்கு அடிமை செய்ய வேண்டும் என்பதில்லை. எம்பெருமான் எழுந்தருளியுள்ள தி ரு க் கோ யி வி ன் திருவாசலைக் கோலமிடும் கைங்கரியத்தை மேற்கொண்டா லும் போதும் என்கின்றார் ஆழ்வார். 'கடைத்தலை சீயக்கப்பெற்றால் கடுவினை களையலாம்’’’ (கடைத்தலை - திருமுன்றில்; சீய்த்தல் . மெழுகிக் கோலமிடல்.) 29. திருவாய் 10. 2; 9. 30. டிெ 10, 2: 10, 31. திருவிருத். 79 32. திருவாய் 10.2:?