பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 4}. கைங்கரியம் என்ன என்பதை அடுத்து விளக்குகின்றார் ஆழ்வார். பக்தியுடன் தூய நீரையும் நறு மலர்களையும் கொண்டு அருச்சித்து எம்பெருமானுடைய திருப்பெயரை நினைத்தல் வேண்டும். அதனால் பெறும் பலன்தான் என்ன? அது சாதரண பலன் அன்று. இந்தக் கொடிய உலகில் பிறந்த பிறப்பிற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும். 'புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்துவி எண்ணுமின் எந்தைநாமம் இப்பிறப்(பு) அறுக்கும்; அப்பால்’’’ (புண்ணியம் - பக்தி; புனல் நீர்; பிறப்பு - சம்சாரம்) என்பது இக்கருத்தை விளக்கும் ஆழ்வாருடைய பாசுரப் பகுதி. எந்தை நாமம் எண்ணுமின் என்பதற்கு ஈடு: 'இடறினவன் ‘அம்மே” என்னுமாறுபோல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைக் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர் பட்டரைத் திருநாமம் சொல்லும்போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?’ என்று கேட்க, அதற்கு அவர், கங்கையிலே முழுகப் போமவனுக்கு” வேறு ஒர் உவர்க்குழியிலே முழுகிப்போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தரமாட்டாதோ? என்று அருளிச் செய்தாராம், திருநாமம் சொல்லுகைக்கு ருசியே’’ ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்”. இப்பகுதி நன்கு சுவைக்கத் தக்கது. இந்தக் கைங்கரியத்தையே மேலும் இரண்டு பாசுரங்களில் வற்புறுத்துகின்றார். தூபம், நறுமணம் மிக்க மலர்கள்: 27. திருவாய் 10, 2: 5 28. ருசி-பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல் களையோ அறிந்தே செய்வதற்குக் காரணமாயுள்ள சுவை.