பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

叙} மலைநாட்டுத் திருப்பதிகள் யுள்ளனர். முக்தி அடைந்த பிறகு பரமபதத்தில் எம் பெருமானுக்குச் செய்யும் கைங்கரியத்தை அர்ச்சாவத்தில் செய்யும் வாய்ப்பாகப் பெறுவதைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதுவர் வைணவப் பெரியார்கள். திருவனந்தபுரத்து அண்ணலாருக்கு இத்தகைய கைங்கரியத்தைப் புரிய வேண்டும் என்று நம்மாழ்வார் பேரவாக் கொள்ளுகின்றார். திருவனந்தபுரம் நறுமணம் கமழும் சோலையினுள் அமைந் துள்ளது. அந்த நறுமணம் புறம்பு போகாதபடி மதில் இட்டாற்போன்று கடலால் சூழப்பட்டுள்ளது.அதனால் நறு மனம் வெளிச் செல்லாது விஞ்சி நிற்கின்றது. இப்படிப்பட்ட சோலைகளையுடைய வயல்கள் நகரை அணிசெய்கின்றன. 'பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழும் சோலை %、??芝级 வயலணி அனந்தபுரம் (வேலை - கடல்) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. அடியார்களைக் காக்கும் .ெ பா ரு ட் டு எம்பெருமான் பரமபதத்தைத் துறந்து இந்நகரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு எழுந்தருளியுள்ளான்: இந்நகரில் நேசஞ் செய்து உறைகின்றான். அவனுக்கு முறை தவறாது-அஃதாவது எம் பெருமான் சேவி; இவ்வுயிர்கள் அனைத்தும் அவனுக்குச் சேஷம் என்ற நியதி தவறாமல்மலர் முதலியவற்றை அவன் திருவடிகளில் பரிமாறிக் கைங்கரியம் செய்பவர்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள் ஆவர். இதனை, 'நெறிமையால் மலர்கள் துரவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. * (பூசனை - ஆராதனை.) என்று கூறுவர் ஆழ்வார். 25. திருவாய் 10.2.4 26, .隘 *曾 10. 2; 4s.