பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 39 "மாயன்நாமம் ஒன்றுவோர் ஆயிரமாம்; உள்ளுவார்க்கு உம்பர்ஊரே' (உள்ளுவார் - நினைப்பார்; உம்பர்ஊர் - பரமபதம்) என்று குறிப்பிடுகின்றார். ஒரு திருநாமத்தை உரைத்தாலும் அஃது ஆயிரமாகிச் செயல் புரியும் பெருமையுடையது. அதை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்’’ திருவனந்த புரமே பரமபதமாகிவிடும். வைகுந்தத்தில் நித்திய சூரிகள் திருவோலக்கம் கொடுக்க அவர்கள் நடுவே இருக்கக் கூடிய எம்பெருமான் தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கைக்காக வன்றோ இந்நகரை விரும்பி எழுந்தருளியிருப்பது? அவன் திருப்பெயரைச் சிந்திப்பார் பரமபத்தை அடைவது உறுதி. அல்லது இராமன் இருக்கும் இடமே அயோத்தி என்றாற் போல, அவன் விரும்பியுறையும் இடமே பரமபதம் அன்றோ? அவன் உறைவதனால்தானே பரமபதத்தையும் நாம் விரும்புவது? இதனை வற்புறுத்துவார்போல், 'செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர்ஆவார் - (அணுகுவார் - கிட்டுபவர்; அமரர் - நித்திய சூரிகள்) என்று மேலும் பன்னியுரைக்கின்றார். திண்ணம் நாம் அறியச் சொன்னோம் என்று அதே பாசுரத்தில் தம் அநுபவ மாகவும் பேசுகின்றார் ஆழ்வார். - - வைணவ சமயத்தின் முடிந்த முடிவான குறிக்கோள் எம்பெருமானுக்கு அடிமை செய்வதேயாகும்; அஃதாவது, ஏதோ ஒரு விதத்தில் அவனுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும். இதனையே எல்லா ஆழ்வார்களும் வற்புறுத்தி 22. திருவாய்10. 2: 2 23. திருப்பாவை - 5 24. திருவாய், 10, 2, 5 罗曾笼盛