பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மலைநாட்டுத் திருப்பதிகள் அடுத்து, இத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானை அடையாளம் காட்டி அவனது திருநாமத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலனைப் பேசுகின்றார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கருடனை வாகனமாகக் கொண்டவன்; அவனது கொடியும் கருடனேயாகும். இதனை 'ஊரும்புள்; கொடியும் அஃதே’’’ என்கின்றார். தவிர, அவன் பிரளயத்தில் இவ்வுலகினைத் தன் வயிற்றில் அடக்கிக் காப்பாற்றியவன். இந்த எம்பெருமானோ, "ஒரா யிரமாய் உலகுஏழ் அளிக்கும் பேராயிரம் கொண்டது ஒர்பீடு உடையன்' என்றவாறு எண்ணற்ற திருப்பெயர்களை யுடையவன். "ஆயிரம் என்பது கணித எண்ணிக்கை யன்று; எண் ணற்றவை என்பதே பொருள். எல்லா ஆழ்வார்களுமே "பேராயிரமுடையபெம்மான்’ என்று குறிப்பிட்டுள்ளனர். கம்ப நாடனும் 'ஆயிரம் பெயருடைய அமலன்' " என்று சுட்டியுரைத்துள்ளான். இந்தப் பெயர்களுள் ஏதேனும் வாய்க்கு வந்த ஒரு திருநாமத்தைப் பேசுமாறு பணிக் கின்றார் ஆழ்வார். “பேரும்ஒர் ஆயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே." என்பது அவருடையதிருவாக்கு அந்தப் பெயரையும்கூசாமல் பேச வேண்டுமாம். பேசுமின் கூசமின்றி' என்று பின்னும் வற்புறுத்துகின்றார். அதனால் ஏற்படும் பலனையும், T7. திருவாய் 10.2:3 18. , 9.3 : 1 19. கம்பரா. அயோத். சித்திர, ! 20. திருவாய் 10, 2 : 3 2. டிெ 10, 2, 4