பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 37 புறப்பட்டுவிட்டால் ஏழேழ் பிறப்பிலும் எந்த விதமான பொல்லாங்கும் நேரிடாது என்பது அவர் நினைப்பு. "நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டோடித் துறுகள் பாய்ந்தனவே’** நம்மன் போல் - பூதப் பிசாசங்கள் போல்: வீழ்த்து . கீழே தள்ளி; சும்மெனாது . மூச்சுவிடவும் மாட்டாமல்; தூறுகள் - புதர்கள்.) என்று பெரியாழ்வார் குறிப்பிடுவதுபோல் தாமாகவே அகன்று விடும். "இன்றுபோய்ப் புகுதிராகில் எழுவையும் ஏதம் சாரா'." (ஏதம் பொல்லாங்கு) என்பது ஆழ்வாருடைய திருவாக்கு. இப்பிறப்பில் மட்டு மல்ல, இன்னும் வருகின்ற ஏழ்பிறப்பில் நேரிடும் துன்பங் களும், கடந்த ஏழ் பிறப்பில் செய்த தீவினைகளும் அகன்று போய்விடும். மேலும் இக்கருத்தையே ஆழ்வார்; "சிக்கெனப் புகுதிராகில் தீருநோய் வினைகள் எல்லாம் திண்ணம்நாம் அறியச்சொன்னோம்’** (சிக்கென - விவைாக திண்ணம் . உறுதி; என்று உறுதிப்படுத்திப் பேசுவர். துக்கங்களும் துக்கத்திற்கும் காரணமானவைகளும் அழியும்; இதை அதுபவத்தில் கண்ட ஆழ்வார் இந்த இயல்பினை அறியாத ஏனையோருக்கும் நெஞ்சில் படும்படி உரைக்கின்றார். - 14. பெரியாழ் திரு. 5. 4 : 3 15. திருவாய் 10.2 : 21 16. டிெ 10, 2 $ 3