பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 மலைநாட்டுத் திருப்பதிகள் இடர் - துன்பம்; நாளும் நிரந்தரமாக கூற்றின் தமர் - பமபடர்கள்; குறுக - அணுக, அரவு பாம்பு; சுரும்பு - வண்டுகள்; அலற்றும் - ஆரவாரிக்கும்; தடம் - குளம்). பாசுரத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே நகரினுள் நுழைகின்றோம். ஆதிசேடன்மீது திருக்கண் வளரும் எம் பெருமான்-அனந்த சயனன்-விரும்பி எழுந்தருளியிருக்கும் நகர் அனந்தபுரம். கேசவா என்ற மூன்றெழுத்துகளைச் சொன்ன அளவிலே இடர் என்று பேர்பெற்றவை எல்லாம் கெடும். போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசு ஆகும்” என்று ஆண்டாள் கூறியவாறு, பிராரப்த கருமங்களும் (நுகர்வினை) சஞ்சித கருமங்களும், (பழவினை) நெருப்பிலிட்ட பஞ்சுபோல் நசித்துப் போய் விடும். "அவன் ஒரு விரோதியைப் போக்கினபடியைச் சொல்ல விரோதி என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்' என்பது ஈடு, கேசவ நாமத்தை வாய்விட்டுச் சொல்வதே கேசவனை அர்ச்சித்ததாகும் என்பது ஆழ்வாரு டைய திருவுள்ளம். இந்த உலகில் தீச்செயலை மேற்கொள்ள நினைப்பவர் சிறிதும் தாமதியாது உடனே செய்து முடிப்பதும், நற் செயலை மேற்கொள்ள நினைப்பவர் பார்ப்போம், பார்ப் போம்’ என்று காலத்தை நீட்டிக் கொண்டே போவதும் இயல்பாக இருப்பதை இன்றும் நாம் காணலாம். அனந்த புரம் போக வேண்டும் என்ற நினைப்புத் தோன்றிய அன்றே போக வேண்டும் என்பது ஆழ்வாருடைய விருப்பம். ஆகவே தான், “புகுதும் இன்றே" என்று கூறினார். இதையே மேலும் “இன்று போய்ப் புகுதிராகில்' என்று அடுத்த பாசுரத் திலும் வற்புறுத்தி விரைவு படுத்துகின்றார். அப்படி உடனே 11. திருப்பாவை 15. 12. திருவாய் 10, 2 : 1 (ஈடு காண்க.) 13, டிெ 10.22