பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 35 'எழில் அணி அனந்தபுரமாகவே' 'மடைத்தலை வாளை பாயும் வயலணி அனந்தபுரமாகவே” காட்சி அளிப்பதை நேரில் செல்வோர் கண்டு களிக்கலாம். இந்த அழகிய திருப்பதியை நம்மாழ்வார் மட்டிலுமே மங்களாசாசனம் செய்துள்ளார்." அந்த மங்களாசாசனப் பாசுரங்களை மனத்தில் சிந்தித்த வண்ணம் திருவனந்தபுரத்தை அடைகின்றோம். உண்மையி லேயே நம்மாழ்வார் கூறுகிறபடியே குன்று நேர் மாடங் களையுடைய அந்தத் திருப்பதியைக் காண்கின்றோம். நவீன நாகரிகத்தை யொட்டிப் பெரிய பெரிய மரங்களை யெல்லாம் வெட்டி அவ்விடங்களில் பெரிய கட்டடங்களை எழுப்பினாலும் திருவனந்தபுரத்தைப் பொறுத்த மட்டிலும் தோப்புகளுக்கும் சோலைகட்கும் குறைவில்லை. இயற்கைச் சூழ்நிலையும் செயற்கைச் சூழ்நிலையும் ஒன்றையொன்று அணி செய்து கொண்டுள்ள காட்சியை எம்மருங்கும் கண்டு களிக்கின்றோம். - பேருந்து ஊரினுள் நுழையும்போது முதற்பாசுரம் நம் நினைவிற்கு வருகின்றது. ‘கெடும்இடர் ஆயஎல்லாம் கேசவா! என்ன, நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்; விடம்உடை அரவில்பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் தடம்உடை வயல் அனந்த புரநகர் புகுதும்இன்றே' 6. திருவாய் 10 2 :8 7. டிெ 10.2 : 7 8. டிெ 10.2. 0. டிெ 10,2 - 1