பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மலைநாட்டுத் திருப்பதிகள் "ஓங்கு மரன் ஓங்கிமலை ஓங்கிமணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மித் தூங்குதிரை பாறுதவழ் சூழலது ஒர்குன்று' |ஒங்குமரன் - உயர்ந்தமரம்: ஓங்கி உயரப் பெற்ற; பூங்குலை - பூங்கொத்துக்கள், குலாவும் - விளங்குகின்ற: புடை விம்மி பக்கங்களில் விளங்கப்பெற்ற: தூங்குதிரை - மிக்க அலைகள்; சூழல் சுற்றிடம்) என்று கம்பன் காட்டும் சூழ்நிலை நமது நினைவிற்கு வரு கின்றது. அகத்திய முனிவர் ஆசியுடன் வில்லும் வாளும் அம்பும் பெற்றுப் பஞ்சவடியை நோக்கி வரும் இராமன் பஞ்சவடி அமைந்துள்ள சூழ்நிலையைக் காட்டுவது இது. நாகர் கோவிலிலிருந்து சுமார் ஐம்பது கல் தொலைவிலுள்ள திருவனந்தபுரம் வரையிலும் இதே சூழ்நிலைதான். சில இடங்களில் பகலவன் கதிர்களும் உள் புகா நிலை. இக்காட்சி களைக் கண்டுகளித்த வண்ணம் திருவனந்தபுரத்தை அடை கின்றோம். திருவனந்தபுரமும் ஒர் அழகிய சோலை சூழ்ந்த இடத்தில்தான் அமைந்துள்ளது. “குருத்து சேர் செருந்தி புன்னை, மன்று அலர் பொழில் அனந்தபுரநகர்' 'பெரிய நீர் வேலை சூழ்ந்து, வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்', செறி பொழில் அனந்தபுரம்' என்று நம்மாழ்வார் இத்திருப்பதியைச் சிறப்பிக்கின்றார். கிட்டத் தட்ட இதே நிலையினை இன்றும் காணலாம். அத்திருப்பதி 2. கம்பரா - ஆரணி - அகத்திய - 37. 3. திருவாய் 10, 2 : 2 4. டிெ 10.2 : 4. 5. டிெ 10, 2 : 5, 8.