பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனந்தபுரத்து அண்ணலார் 5i ஈர்க்கின்றது. இவற்றைத்தவிர, மார்த்தாண்ட மன்னரால் தொடங்கப்பெற்ற பத்ரதீபம்’ என்ற திருவிழா இன்றும் ஆண்டிற்கு இருமுறை-ஒன்று மிதுனத்திலும் (சூன்-சூலை) மற்றொன்று தனுவிலும் (டிசம்பர்-சனவரி)-நடைபெற்று வருகின்றது. ஆண்டிற்கொருமுறை முரஜபம்' என்ற சமய வழிபாடும் தவறாது நடைபெற்று வருகின்றது. கோயில் நடைமுறையை இன்றும் அரச குடும்பத்தினரே கண் காணித்து வருகின்றனர். - இந்தத் திவ்விய தேச யாத்திரையில் இன்னோரன்ன குறிப்புகளையெல்லாம் அறிந்து மன நிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.