பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவாறன் விளைத் திருக்குறளப்பன் இ:ைணவ தத்துவப்படி ைவ குந் த நாதனாகிய நாராயணனே முழுமுதற் கடவுள். அவனே எல்லா உலகங் களையும் படைத்தவன். ஒரு காலத்தில் பிரளயத்தில் அழியாமல் காப்பவனும், சில சமயம் தன் திருவயிற்றில் வைத்துப் புரப்பவனும் அவனே. அவனே எல்லாம். இத்தகைய பெருமானை அடைய நம்மாழ்வார் துடித்து நிற்கின்றார். "எங்குவந்து உறுகோ? என்னை ஆள் வானே! ஏழுல கங்களும் நீயே; அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே, அவற்றுஅவை கருமமும் நீயே; பொங்கிய புறம்பால் பொருள் உள வேனும்; அவையுமோ நீ இன்னே ஆனால், மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே: வான்புலம் இறந்ததும் நீயே.' (உறுகோ - அடைவேன்; கருமம்-காரியம்; இன்னே - இப்படியே; மங்கிய அருவாம் நேர்ப்பம் - புலனுக்குப் புலப் படாது சூக்கும நிலையிலுள்ள பொருள்கள்.) என்பது பாசுரம், "என்னை ஆள்கின்றவனே! ஏழுலகங் களும் நீ இட்ட வழக்கு; அந்த உலகங்களிலே அவ்வவர் கட்குச் சமைத்து வைத்த தெய்வங்களும் நீ இட்ட வழக்கு; அந்த அந்தத் தெய்வங்களுக்குச் செய்யப்படுகின்ற ஆராதன உருவமான செயல்களும் நீ இட்ட வழக்கு; ஒன்றற்கு ஒன்று 1. திருவாய். 8. 1 : 5 ,