பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 53 விரிந்ததாய் அண்டத்துக்குப் புறம்பாய் அதற்குக் காரணமாக வுள்ள மகத்து முதலான தத்துவங்களும் நீ இட்ட வழக்கு; காரண நிலையில் சுருங்கிக் கிடக்கின்ற சித்து, அசித்துகளும் நீ இட்ட வழக்கு, பரமாகாசத்தில் இருக்கின்ற, புலன்கட்குப் பொருளாகாத முக்தர்களும் நீ இட்ட வழக்கு; இங்ஙனம் எல்லாமாய் நிற்கும் உன்னை அடியேன் எங்ங்ணம் வந்து கிட்டுவேன்?" என்கின்றார் ஆழ்வார். மேருமலையில் நிற்குக் ஒருவனை ஒரு நொண்டி எங்ஙனம் கிட்டமுடியும்? சென்று கிட்டுகைக்கு உறுப்பான சாத்திரங்களில் விதிக்கப் பெற்ற சாதனங்களைப் பின்பற்றத் தமக்கு ஆற்றலில்லாமையை இதனால் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். - ஆழ்வாருக்கு ஏற்பட்ட பாரிப்பு நமக்கும் சிறிது உண்டா கின்றது. அந்தப் பரமபதநாதனை அர்ச்சையில் கண்டு மகிழலாம் என்று எண்ணுகின்றோம். வாத்சல்யம், செளலப் பியம், செளசீல்யம் முதலிய எல்லாக் குணங்களும் முற்றும் பெற்றுத் திகழும் அர்ச்சை வாழ்க! என்று வாழ்த்து கின்றோம். அர்ச்சை வடிவில் தான் எம்பெருமான் நூற்றெட்டுத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளான் என்பதை யும், நம்போலியருக்குச் சேவை சாதித்து,உய்விப்பதற்காகவே அங்ஙனம் கோயில் கொண்டுள்ளான் என்பதையும் நாம் அறிவோம். இங்ங்ணம் திருவாறன்விளை என்ற திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சேவிப்பதற்கு இன்று சித்தமாகின்றோம். திருவாறன்விளை என்ற திவ்வியதேசம் மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் - கொல்லம் தென்னிந்திய இருப்புப்பாதையில் உள்ள செங்கன்னூர் நிலையத்தில் இறங்கி ஏழுமைல் பேருந்தில் சென்று இவ்வூரை அடைதல் வேண்டும். செங்கன்னுரர் மிகச் சிறிய ஊர்: வசதிகளுடன் தங்கவேண்டும் என்று விரும்பு