பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மலைநாட்டுத் திருப்பதிகள் கின்றவர்கட்கு அவ்வூர் சரிப்படாது. ஆகவே, அப்பகுதி யிலுள்ள ஆறு திருப்பதிகளையும் சென்று சேவிக்க வேண்டும் என்று விரும்புவோர் அதே இரும்புப் பாதையி லுள்ள கோட்டயம் என்ற ஊரில் இறங்க வேண்டும். கோட்டயம் பெரிய ஊர்; எல்லா வசதிகளும் அங்குக் கிடைக்கும். நல்ல உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் அங்கு உள்ளன. மலை நாட்டுப் பகுதியாதலால் ஊரின் அமைப்பு மேடும் பள்ளமுமாக இருக்கும். இதனால் குதிரை வண்டிகளும் சைகிள் சிக்ஷாக்களும் அங்கு இல்லை. ஸ்கூட்டர் களும் வாடகைக் கார்களுமே அங்குக் கிடைக்கும். இத்தகைய வசதிகளைக் கொண்ட கோட்டயத்தில் இறங்கி தம் பொருளாதாரப்படி வசதிகள் அடங்கிய விடுதியில் தங்கி இளைப்பாறுகின்றோம். . இத்தகைய 'திருப்பதிச் செலவில் அவசரம் கூடாது. நிதானமாகப் பார்த்து வருதல்வேண்டும். சொந்த வாகன வசதி இருந்தால் இந்த ஆறு திருப்பதிகட்கும் ஒரே நாளில் சென்று சேவித்துத் தி ரு ம் பி வி ட"லா ம். அத்தகைய வசதி வாய்ப்பு இல் லாதவர்கள் காலையில் ஒரு திருப்பதியும் மாலையில் ஒரு திருப்பதியும் சென்று சேவித்தல் நன்று. பெரும்பாலும் மலை நாட்டுத் திருப்பதிகளிலுள்ள திருக்கோயில்கள் யாவும் முற்பகல் {7}-12 மணி வரையிலும் மாலை (5-8) மணி வரை யிலுமே திறந்து வைக்கப்பெற்றிருக்கும். பேருந்து வசதி களிருப்பினும் அவை புறப்படும் நேரம், அவை திரும்பும் நேரம், ஆங்காங்குக் கிடைக்கும் உணவு வசதிகள் இவற்றைப் பொறுத்தே நம் செலவு நிறைவுபெறுதல் வேண்டும். சொந்த வாகன வசதியில்லாதவர்கள்-கேரள நாட்டிற்குப் புதியவர் கள்-பல்வேறு சங்கடங்களை அநுபவிக்கத் தயாராக இகுத்தல் Gఖఉ9ు. உடலில் வலுவும், எதையும் சகித்து திற்கும் ஆற்றலும் உள்ளவர்கட்கு கேரளத் திருத்தலப்