பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 55 பயணம் ஆநந்தமாகவே இருக்கும். இயற்கைக் காட்சிகளும் தட்பவெப்ப நிலையும் மனத்திற்குக் களிப்பாக இருக்கும். 3. சோர்வின்றி யாத்திரையை இனிதாக முடிக்கலாம். அதிகாலையில் நன்னீராடித் தூய ஆடையை உடுத்திக் கொண்டு கோட்டயம் இருப்பூர்தி நிலையத்தை அடை கின்றோம். இருப்பூர்தி ஏறி இருமருங்கும் வனப்புக் கொழிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டே செல்லுகின்றோம். சற்றேறக்குறைய காலை ஏழு மணிக்கு வண்டி செங்கன்னூர் நிலையத்தை வந்தடை கின்றது. ஒரு சிற்றுண்டிச் சாலையில் காலை உணவினை முடித்துக்கொண்டு ஒரு பேருந்தின் மூலம் கிழக்கே ஏழு கல் தொலைவிலுள்ள, “அகலிடம் முற்றவும், ஈரடியே ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள்ப்பன் அமர்ந்து உறையும்’’’ - [ஈர் அடி - இரண்டு அடி : ஆகும் பரிசு ஆகும்படி; நிமிர்ந்த - வளர்ந்த அமர்ந்து - பொருந்தி) திருவாறன் விளை என்ற ஊரை அடைகின்றோம். பேருந் தில் வரும்போது இயற்கைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. எங்கும் ஒரே சோலைமயம். தோப்புகளும் துரவுகளும், வாவிகளும் சிற்றாறுகளும் எம்மருங்கும் சூழ்ந்துள்ளமையைக் ஆண்டுகளிக்கின்றோம். நம்மாழ்வாரும், அணிபொழில் சூழ் திருவாறன் விளை',' "நீடு பொழில் திருவாறன் விளை' கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன் 2. திருவாய் 7 , 10 : 2 3 டிெ 7 , 10 : ! 4. டிெ 7, 10 : 3