பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகவ்ாறன் விளைக் திருக்க றளப்பன் 57 ಆಆ ಕಿ ; த திருககுற லிருந்தே ஆற்றிற்குச் சென்றுவரப் படிக்கட்டுக்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இப் படிக்கட்டுகளின் அருகிலேயே கோயிலுக்கு வெளியே ஒரு விசாலமான இடப்பரப்பில் அர்ச்சகரின் இல்லமும் அமைந்துள்ளது. எப்பெருமானுக்குப் பூசனை முதலிய கைங்கரியம் செய்யத் தமக்கு முறை வருங்கால் அர்ச்சகர் மாணியாய் (பிரம்மச்சரியம் காத்து) வாழ வேண்டும் என்ற நியதியிருந்துவருவதாகக் கூறுகின்றனர். நாமும் ஆற்றிலிறங்கிக் கை கால்கள் சுத்தி செய்துகொண்டு திருக்கோயிலுக்குள் நுழையச் சித்தமாகின்றோம். அர்ச்சி கரும் ஆற்றில் குளித்து ஈர ஆடையுடன் திருக்கோயிலில் எம் பெருமானுக்குப் பணி புரிகின்றார். இத் திருகோயில் எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலுமே ஒரு திருவாய் மொழியில் மங்களா சாசனம் செய் துள்ளார்.’’ வேறு ஆழ்வார்கட்கு இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. எண்பத்தாறு திவ்விய தேசங்கள் யாத்திரை சென்று வந்த திருமங்கை மன்னனும் இங்கு வரவில்லை போலும் நம்மாழ்வாரின் பாசுரங்கள் ஒவ்வொன்றாக நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றன. 'இன்பம் பயக்க, எழில்மலர் மாதரும் தானும் இவ் ஏழுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான், அன்புற்று அமர்ந்து உறை கின்ற அணிபொழில் சூழ்திரு வாறன்விளை, அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ!' (எழில் மலர் மாதர் - இலக்குமி, பிரான் - உபகாரன். 12. திருவாய்1.10. 13. டிெ 7, 10 : 1.