பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மலைநாட்டுத் திருப்பதிகள் 'அல்லி மலர் - மகள் போக மயக்குக்களாகியும் நிற்கும் அம்மான்' என்றவாறு திருவாய்மொழியைச் செவி மடுப்ப தற்காக என்றே பெரிய பிராட்டியுடன் எம்பெருமான் ஆனந்தமயனாகத் திருவாறன்விளையில் எ ழு ந் த ரு வரி புள்ளான். இன்பம் பயக்க...இவ்வேழுலகை என்பதற்கு ஈடு; *தாய் தந்தையர் இருவரும் சேர இருந்து பரியப்புக்கால், குழந்தைகட்கு ஒரு குறையும் பிறவாது அன்றோ? ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக அச்சேர்த்தியைக் காண்கையாலே உலகத்திற்கு ஆனந்தம் உண்டாக, அதனைக் கண்டு, குழந்தை பால்குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப்போலே இவர்கட்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பாரா யிற்று" என்பது. திருவாய் மொழி கேட்கைக்குத் பாங்கா யிருப்பதொரு தேசம் பெற்றோம்’ என்று பெறாப்பேறு பெற்றாப் போலே விரும்பி எழுந்தருளியிருக்கும் தேசம் என்பது தோன்ற இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற என் கின்றார். பூம் பொழில்கள் சூழ்ந்த அத்தகைய திருவாறன் விளையை வலம் வருதல் முதலானவற்றைச் செய்து வழிபடும் நாள் எந்நாளோ என்று பாரிக்கின்றார் ஆழ்வார். இப்பாக ரத்தைத் திருவுள்ளம்பற்றியே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இத்திருப்பதியில் விளங்கும் குணத்தை 'ஆனந்த வளர்ச்சி' என்று குறிப்பிட்டார். 'பிரணவசித்தம் பரத்வ விமுகம் ஆக்கும் ஆநந்த விருத்தி, நீணகரிலே' என்பது சூத்திரம். விருத்தி - வளர்ச்சி நீள்நகர் - திருவாறன் விளை. பிரணவம் - அன்பு. விமுகம் ஆக்குதல் - வேறு 14. திருவாய் 3, 10 : 8. 15. டிெ 7, 10 : 1. ( ஈட்டின் தமிழாக்கம் காண்க.) 16. ஆசா. ஹிரு . 171.