பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 59 படுத்துதல். இத் திருப்பதியின்மீது ஆழ்வாருக்குள்ள அன்பு பரத்துவத்தையும் விரும்பாதபடி செய்துவிடும் என்பதாகும், கோயிலைச்சுற்றி வலம் வருதல் என்பது பண்டிருந்தே வழங்கி வரும் வழக்கமாகும். தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் வழிபாடு செய்யும் மக்களிடையே இந்த வழக்கம் இருந்து வருவதை இன்றும் காணலாம். திரு வரங்கம், இராமேச்வரம், சிதம்பரம் போன்ற பெரிய திருக் கோயில்களில் பல திருச்சுற்றுகள் உள்ளன. இத்தகைய கோயில்களில் உள் சுற்றுகள் முற்றிலுமே கல் பரப்பப்பெற்றி ருக்கின்றன. பெரும்பாலும் வெளிச்சுற்றுகளில் (மதுரை மீனாட்சி கோயில் போன்ற ஒரு சில கோயில்களைத் தவிர) இத்தகைய ஏற்பாடுகள் இருப்பதில்லை. கேரள மாநிலத் திலுள்ள பெரும்பாலான கோயில்களில் (திருவனந்தபுரம் போன்ற ஒரு சில கோயில்களைத் தவிர) ஒரே பிராகாரமே உள்ளது. அந்தப் பிராகாரத்தில் கோயிலைச் சுற்றி வலம் வருவதற்கென்றே கல் பரப்பப்பெற்ற நடை பாதைகள் உள்ளன. மேலும், கோயிலை வலம் வரும் வழக்கம் கேரளத்தில் எல்லா மக்களிடம் தவறாது இருந்து வருவதைக் காணலாம். கோயிலை வலம் வருதலில் பேரார்வம் கொண்ட ஆழ்வார்,

  • மாகந்த நீர்கொண்டு தூவி

வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?’’ (மாகந்தம்-சிறந்த பரிமளம்) என்றும், "செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை ஒன்றி வலம்செய்ய ஒன்றுமோ?* (ஒன்றி.கிட்டி ஒன்றுமோ-கூடுமோ) என்றும், 17. திருவாய், 7. 10 : 2 18. டிெ. 7, 10 : 8.