பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன் Ꭶ0 மலைநாட்டுத் திருப்பதிக பொழில் திரு வாறன் விளையதனை, மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’** (மேவி-பொருந்தி) என்றும் இப்பழக்கத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்து வதைக் கண்டு மகிழ்க. இங்ங்ணம் நாடோறும் வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைக்குமோ என்று துடித்து நிற்கின்றார் ஆழ்வார். "நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே' (நிச்சலும் - எப்பொழுதும்) என்ற பாசுரப் பகுதியில் இத்துடிப்பினைக் காணலாம். இந்தத் திவ்விய தேசத்திற்கு யாத்திரையாக எழுந்தருளும் பக்தர்கள் மேற்கூறிய ஆழ்வாருடைய பாரிப்புக்கு இணங்க நறுமணங் கமழும் சந்தனச் சேற்றைத் திருமதிலிலே தூவி வழிபாடு செய்யும் வழக்கத்தை இன்றும் காணலாம். திருவாறன்விளை போகவேண்டும் என்ற ஆழ்வாருடைய பேரவா அடுத்த பாசுரத்தில் தெளிவாகப் புலனாகின்றது. 'கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை, ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி அவனஉறையும் பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர்வாழ, 19. திருவாய். 7. 10 : 9 20, . *: 7. 10 : 3.