பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறளப்பன் 63 நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே' (கூடுதல் - நிறைவேறப்பெறுதல்; வைகலும் நாடோ லும்; ஆடும்பறவை - கருடன், நீடு - பெரிய வாய்க்குங் கொல் - கிட்டுமோ, நிச்சலும் - எப்போதும்) நம்மாழ்வார் எந்தத் திருக்கோயிலையும் நேரில் சென்று சேவிக்கவில்லையென்றும், திருப்புளியாழ்வாரின் திருவடியி லிருந்து கொண்டே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாட்டால் பரவினார் என்றும் ஒரு கொள்கை நிலவி வருகின்றது. இதனை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். இப் பாசுரத்தில் ஆடும் பறவை மிசைக் கண்டு என்பதற்கு நம் பிள்ளை அருளியிருக்கும் சிறப்புப் பொருள் இன்சுவை மிக்கது : 'திருவாறன்விளையைக் குறிக்கோளாகக் கொண்டு எம்பெருமானைக் காண வேண்டும் என்று நாம் (ஆழ்வார் அவ்விடந் தேடிச் சென்றால், அவன் (எம்பெருமான்) திரு நகரியைக் (நம்மாழ்வாரின் இருப்பிடம்) குறிக்கோளாகக் கொண்டு இங்கே நம்மைக் காண வேண்டும் என்று ஆடும் பறவைமிசை ஏறி வருவனே: அன்னவனை நடுவழியிலே கண்டு’ என்பதாக, ஆழ்வார் எம்பெருமான்மீது கொண் டுள்ள பேரவாவைவிட எம்பெருமான் ஆழ்வார்மீது பன்மடங்கு பேராவாக் கொண்டிருந்தான் அன்றோ? ஆடு' என்பதற்கு வெற்றி என்று பொருள் கொள்ளலாம். எம்பெரு மானின் வெற்றிச் செயல்களிலெல்லாம் பங்குகொண்ட வனன்றோ பெரிய திருவடி? அன்றியும், "சர்வேசுரவரனின் வாகனம் என்கின்ற உவகை மிகுதியினால் கட்குடியர் போன்று களித்து ஆடா நின்றுள்ள திருவடி தோளிலே கண்டு என்ற பொருள் இன்னும் சிறக்கும். பாசுரத்தின் 21. திருவாய்.1.10 3.