பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? மலைநாட்டுத் திருப்பதிகள் இறுதியில் வாய்க்குங்கொல் நிச்சலும் என்றிருந்தும் தொடக்கத்தில் கூடுங்கொல் வைகலும் என்றிருப்பது ஆழ்வாரின் ஆதராதிசயத்தையும் (அதிகமான பரிவையும்) விரைவு மிகுதியையும் காட்டுகின்றது. “எய்தா நின்கழல் யான்எய்த, ஞானக் கைதா, காலக் கழிவுசெய் யேலே’’’ என்று வேண்டினவரன்றோ? இருந்த இடத்திலிருந்து கொண்டே எம்பெருமானை மனத்திலே நினைக்கும்படியான பேற்றினை ஆழ்வார் அவாவி நிற்கின்றார் என்பது அடுத்த பாசுரத்தாலும் அறியக் கிடக்கின்றது. “வாய்க்குங் கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற 掌 本 :}; வாய்க்கும் மணிநிறக் கண்ண ரான்றன் மலரடிப் போதுகளே’’’’ [நிச்சலும் - எப்பொழுதும்; எப்பொழுதும் - இடையீ டின்றி, மலரடிப் போதுகள் - திருவடித் தாமரைகள்.) திருவாறன்விளை சென்று அநுபவிக்கும் பேறு இல்லை யாயினும், ஆழ்வாருக்குக் கவலையில்லை. திருப்புளியாழ் வாரிடமிருந்து கொண்டாகிலும் அவன் திருவடிகளை நிரந் தரமாக இடைவிடாது சிந்தனை செய்யும் பேறு வாய்க்குமோ என்று துடிக்கின்றார் ஆழ்வார். நிச்சலும் என்று சொல்லி எப்பொழுதும் என்று மீட்டும் சொல்லியதன் கருத்தினை விளக்கும் ஈடு காண்மின்: 'நித்யாக்தி ஹோத்ரம் போலே ஒரு கால விசேஷத்திலாய்ப் போக வெண்ணாது: எல்லா அவஸ்தைகளிலும் உண்டாக வேண்டும்” என்று. ஒருவர் 22. திருவாய் 2, 9 2. 23 டிெ 7, 10 4.