பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாறன்விளைத் திருக்குறப்பன் 63 நாள்தோறும் அக்நிஹோத்திரம் பண்ணுகிறார் என்றால், இரவும் பகலும் அதுவே செயலாக இருக்கிறார் என்பது இல்லை. ஒருநாளைக்குச் சிறிது நேரம் அதனை மேற்கொண் டாலும் அங்ங்ணம் மேற்கொள்பவருக்கு "நி த் தி ய அக் நிஹோத்தரி என்ற பெயர் வந்து விடுமல்லவா? அங்ங்ணம் ஆகாமல் எம்பெருமானை அநவரதமும் நினைக்கப் பெறவேண்டும் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம். இவ்விடத்தில் மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள பண்பு நினைவுகூர்தற்பாலது. பள்ளிச் சிறுவன் ஒருவன் பள்ளி ஆண்டுவிழாவின் பொழுது நடைபெற இருக்கும் நாடகத்தில் பங்கு பெறவேண்டும் என்பது ஏற்பாடு. அதற்காக அவனுக்கு நாள்தோறும் பயிற்சி தரப்பெறுகின்றது. நாடக உரைகளை மனப்பாடம் செய்தல், நடித்தல், நாடக உடையின்றியும் உடையுடனும் நடித்தல் என்றெல்லாம் பல படிகளில் பயிற்சி பெற்று வருகின்றான் சிறுவன். பள்ளி ஆண்டு விழாவில் நடிப்பதால் பெறுகின்ற அநுபவத்தைக் காட்டிலும், நடிக்கப் போகின்ற மனோரதத்தால் (விருப்பம், அவன் பெறற்கரிய பேரின்பம் பெற்று வருகின்றான். இதனை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். இத்தகை மனோரதம் வளர்ந்தவர்கட்கும் ஏற்படுவதுண்டு. இதனை ஈட்டின் ஆசிரியர் நம்பிள்ளை ஜிதந்தா' சுலோகம் ஒன்றினைக் 24. ஜிதந்தே தோத்திரம் இதனை எழுதியவர் பெயர் தெரியவில்லை. இது ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பெற்ற சுலோகங்களின் தொகுப்பு, பாஞ்சாரத்திர விதிப்படி நாள் தோறும் செய்ய வேண்டிய கிரியைகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் முதல் ஐந்து பகுதிகளி லுள்ள சுலோகங்கள் முறையே இந்தக் கிரியைகள் நடைபெறும்கால் ஒதப்பெற வேண்டியவை. ஆறாவதில்