பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு பாட்டுக்குப் பாட்டறிவேன்-குட்டி பலபாட்டு நான் அறிவேன் எதிர்ப்பாட்டுப் பாடாவிட்டால்-நாக்கை இழுத்துப்பிடித் தறுத்திடுவேன். மஞ்சள் புடைவைகட்டி-குட்டி மதிலோரமாப் போறபொண்ணே மஞ்சள்வாடை பட்டுநான்-குட்டி மாடோட்டவும் கூடலையே. கூடைமேலே கூடைவச்சு-அடி கூடலூரு போறபொண்ணே கூடைவந்து அரைப்பணமாம்-உன் கொண்டைப்பூக் கால்பணமாம். தண்டை கொலுசுக்காரி-குட்டி தாவார வீட்டுக்காரி கொண்டையிலே பூவுவைக்க-இன்னும் கொஞ்சநாளு போகணுண்டி, ஊரார் உறங்கையிலே-குட்டி உன்புருசன் துணங்கையிலே சங்காசி வேசங்கொண்டு-குட்டி சாமத்திலே நான்வருவேன். குடமெடுத்துக் கூடவந்த-அடி கோலவர்ண நீலவண்டே படமெடுத்த பாம்புபோலே-குட் பத்துதடி என்மனசு, . மலேபோல மாமரமாம்-மாமா மாமரத்தில் ஒருவகஞ்சலாம் மாயகிருஷ்ணனைப் போலேயுேம்-மாமா காயஊஞ்சல் ஆயலுமா? 42 43 44 45 46 47 48.