பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கரத்தினமே! தினக்கொல்லையில் காடுவெட்டிக் கல்பொறுக்கிக் கம்புசோளம் தினேவிதைத்துக் காலைமாலே காட்டைக்காக்கத்-தங்கரத்தினமே கண்விழித் திருந்தாங்களாம் பொன்னுரத்தினமே. 1. அள்ளிஅள்ளி விதைத்த அழகுத்தினே சாகாதடி மொள்ளமொள்ள விதைத்த-தங்கரத்தினமே மொந்தத்தினை சாகாதடி-பொன்னு ரத்தினமே.2 கறுப்பான ஓடிவரக் கள்ளரெல்லாம் தினேவிதைக்க வெள்ளான ஓடிவரத் - தங்கரத்தினமே வேடரெல்லாம் கினேவிதைக்கப் பொன்னுரத்தினமே. 3 சின்னச்சின்ன வெற்றிலேயாம் சேட்டுக்கடை மிட்டாயாம் மார்க்கட்டு மல்லிகைப்பூ-தங்கரத்தினமே (உன்) கொண்டையிலே மணக்குதடி - பொன்னுரத்தினமே 4 சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம் ஓங்கி வளர்ந்த மரம்-தங்கரத்தினமே உனக்கேத்த தாக்குமரம்.பொன்னுரத்தினமே 5 பட பேதம்: மார்க்கட்டு மருக்கொழுந்தாம். 5. சாலேயிலே