பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராசாத்தி மந்திரம் தந்திரக் காரியெல் லாரையும் மானங் கெடுத்தவளே-ராசாத்தி மானங் கெடுத்தவளே. மாற்ருங் தாயி மாரெல் லாரையும் மானங் கெடுத்தவளே-ராசாத்தி மானங் கெடுத்தவளே. வம்புக் காரப் பயல்கள் மேலே வர்மம் வச்சவளேயராசாத்தி வர்மம் வச்சவளே. கேள்வி கூடு விட்டுக் கூடு பாய்கிற கூட்டாளிப் பொண்ணே-ராசாத்தி கூட்டாளிப் பொண்ணே. கூட்டாஞ் சோறு ஆக்க லேயா கூட்டாளிப் பொண்ணே-ராசாத்தி கூட்டாளிப் பொண்ணே. - அங்கிட்டும் இங்கிட்டும் கல்லுப்பொறுக்கி அடுப்புக் கூட்டலேயா-ராசாத்தி அடுப்புக் கூட்டலேயா? கொத்து மல்லி இலையைப் பிடுங்கிக் குழம்பு வைக்கலையா-ராசாத்தி குழம்பு வைக்கலேயா? அம்மியி லேமஞ்சள் மிளகாய் அரைத்து அலுத்துப் போகலையா-ாாசாத்தி அலுத்துப் போகலையா? சட்டிபா னயிலே சமையல் செய்து சலித்துப் போகலையா-ராசாத்தி சலித்துப் போகலேயா? 49 14 15 16