பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆராய்ச்சி உரை கியத்தில் அபூத கற்பனைகள் இருக்கின்றன; கட்டில்லாக் கவிதை யில் பாமரனுக்கு இன்பம் ஊட்டும் எளிய கற்பனே இருக்கிறது. மனித இனத்தின் உன்னத லட்சியத்தை இலக்கியக் கவிதை சொல்கிறது; அன்றன்று மனிதன் படும் இன்ப துன்பத்தை உள்ள படியே நாடோடிக் கவிதை காட்டுகிறது. மனித குலத்தின் அழகை மாத்திரம் புலவர்கள் தம் கவிகளில் காட்டுகிருர்கள்; நாடோடிப் பாவலனே அழகையும் காட்டுகிருன் அழுக்கையும் காட்டுகிருன். இப்படி வழி வழி வருகிற நாடோடிப் பாடல்களைப் பாமரர் போற்றினர். புலவர்களும் கவனித்தனர்; அவற்றைப் புறக்கணிக்க வில்லை. தமிழ் மொழி மிகப் பழையது; தமிழச் சாதியின் வரலாறு மிக மிகப் பழையது. ஆதலின் தமிழச் சாதியின் படைப்புகளும் பழையன. தமிழன் உலகில் முதலில் தோன்றிய மனித இனத் தைச் சேர்ந்தவன். ஆதலின் அவன் முதலில் பேசப் பழகிக் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவன். அந்தக் கால முதலே அறிவு தோன்றி வளரப் பெறுபவன் அவன். தமிழர் தம்முள்ளே இலக் கியத்தை வளர்ப்பதற்குமுன்பே கட்டில்லா இலக்கியமாகிய நாடோ டிப் பாடல்கள் வளர்ந்து வந்தன. பல காலமாக வாழ்ந்து வரும் சாதியாதலின் அதற்குக் கிடைத்த பழைய சொத்து மிகுதியாக இருத்தல் வியப்பன்று. தமிழச் சாதிக்குப் பழம் பாடல்கள் அதிகம், பழமொழிகள் பல பல பழைய கருத்துக்கள் ஏராளம்: பழைய வழக்கங்கள் வேண்டாமென்ருலும் போகாமல் ஒட்டிக் கொண்டுள்ளன. ஆகவே, நாடோடிப் பாடல்களும் பல பல உண்டு; பழையனவும் புதியனவுமாக அவை வளர்ந்து வருகின்றன. 2. தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி தொல்காப்பியம் இன்று கிடைக்கும் பழந் தமிழ் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம். அது இன்ன காலத்தில் தோன்றியது என்று திட்டமாக வரையறுக்க முடியாவிட்டாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய சங்க நூல்களிற் காணுத பல பழைய மரபுகளே அது சொல்வதால் அந்த நூல்களுக்கும் முந்தியது அது என்று கொள்ளக் கிடக்கிறது. குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று கொள்வதில் தவறு