பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - 5 இல்லை. அந்த இலக்கண நூலில் பொருளதிகாரத்தில் செய்யு ளியல் என்னும் பகுதியில், தனிச் செய்யுட்களே ப் பற்றியும் இலக்கிய வகைகளைப் பற்றியும் பல இலக்கணங்களைத் தொல்காப்பியர் கூறுகிருர், - - பல காலமாக வழங்கும் இலக்கியங்களில் கண்ட பொதுவான அமைப்பையெல்லாம் தொகுத்து இலக்கணமாக வகுத்தல் மரபு. அப்படி அமைந்த இலக்கணமும் நாளடைவில் திருத்தம் பெற்றும் விரிந்தும் பின்னும் நல்ல வரையறை பெற்றும் விளங் கும். மிகத் திருத்தமாக ஒர் இலக்கணம் அமைந்தால் அதற்குப் பிறகு அடிக்கடி இலக்கண நூல் எழுவதற்கு அவசியம் இராது. கொல்காப்பியத்துக்குப் பின் பல நூற்ருண்டுகள் கழிந்து 18-ஆம் நூற்ருண்டில் நன்னூல் எழுந்தது. இடையிடையே எழுந்த இலக் கண நூல்கள் தமிழுலகத்துக்குப் பயன்படாமல் ஒழிந்தன. தொல் காப்பியமே தமிழுக்கு இலக்கணமாக வழங்கியது. என்னுரலும் யாப்பருங்கலக் காரிகை முதலியனவும் வந்த பிறகும் தொல்காப் பியம் வழக்கொழிந்து போகவில்லே. பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதி அதன் பயனை மிகுதிப்படுத்தினர்கள். இன்றளவும் தொல்காப்பியத்தின் மதிப்புக் குறையவே இல்லை. இதற்குக் கார ணம் அதில் உள்ள திட்பமும் நுட்பமும் ஒழுங்குமாகும். எடுத்தவுடன் இப்படி ஒரு நூல் தோன்றுவது எளிதன்று. அதற்குமுன் பல இலக்கண நூல்கள் தோன்றித் தோன்றி வழக் கொழிந்து போயிருக்க வேண்டும். அகத்தியர் இயற்றிய இலக் கணம் ஒன்று முன்பு இருந்தது என்று கேள்விப்படுகிருேம். சில காலம் இருந்து, பின்பு வந்த இலக்கண நூல்களின் சிறப்புக் காரணமாக, மங்கி வழக்கொழிந்த இலக்கணங்கள் பல இருக்க லாம். முன் நூல்களில் இருந்த குறைபாடுகளே நீக்கித் திருத்த மாகச் செய்யப் பெற்றமையினுல் தொல்காப்பியம் தனக்குமுன் இருந்தவற்றை மறையச் செய்து இன்றளவும் ஒளிவிட்டு நிலவுகிறது. - - - இங்கே ஓர் உண்மையை நினைவில் வைக்கவேண்டும். இப்படி அமைந்த தொல்காப்பியம் பல காலமாகத் தமிழில் வழங்கிய மரபு. களேத் தொகுத்து முறைப்படுத்திச் சொல்லும் நூல் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியத்தில் கண்ட இலக்கணங் கள் யாவும் தொல்காப்பியரால் புதியனவாகக் கூறப்பட்டவை. அல்ல. பெரும்பாலும் புலவர் பெரு மக்கள் இயற்றிய முன் நூல் களில் கண்டவை. அவற்ருேடு, அக்காலத்து வழங்கிய இலக்கியங்