பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 109 செவ்வாய்ப்பேட்டைச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ செவந்திப்பூ வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. மஞ்சக்குப்பம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மாலேரெண்டு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. வேலூருச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ வெட்டிவேரு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. ஆரப்பாளையம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ அரளிப்பூவு வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. வாணியம்பாடிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ வாடாமல்லிகை வாங்கனுமே - ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - காம் எது செய்யலாம் மாமா, வடமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ வாழைப்பூ வாங்கனுமே ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா - நாம் ஏது செய்யலாம் மாமா. மூக்குப்பேரிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ மூக்குத்தியும் வாங்கனுமே-ஏலங்கிடி லேலோ என்ன செய்யலாம் மாமா-காம் எது செய்யலாம் மாமா. 10 11 12 18 14