பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிவரையறை இல்லாத செய்யுட்கள் 7 நடை அல்லது வசனம். பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முது மொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது காமாலை மந்திரம் முதலியன போலத் தமிழிலே வழங்கிய மக்திரம். குறிப்பு மொழி என்பது இத்தனேயிலும் சேராமல் குறிப்பால் பொருளே உணர்த் தும் வகை. இவை அனைத்தும் பலரிடம் பலகால் வழங்கியமையின் இலக் கண நூலில் சொல்லப் பெறும் இலக்கியங்களாயின. இவற்றில் நூல், எழுதப் பெற்ற புலவர் படைப்பு. உரை, புலவர் படைப்பி லும் வாய் மொழியிலும் வழங்குவது. ஏனேய அனைத்தும், எழுதப் பெருமல் ஒருவர்பால் மற்ருெருவர் கேட்டுணர்ந்து செவி வழி யாகவே வருவன. கொடியொடு புணர்ந்த பிசியும், ஏது துதலிய முதுமொழியும், மறைமொழி கிளந்த மந்திரமும் கூற்றிடை வைத்த குறிப்புமென நான்கும் வழக்கு மொழியாகியும் செய்யு ளாகியும் வருதலின் அவற்றுட் செய்யுளேயே கோடற்கு............ y என்று கூறுவார் பேராசிரியர். செய்யுளில் வந்தவற்றிற்கே இங்கே இலக்கணம் அமைக்கிருர் தொல்காப்பியர் என்பது அவர் கருத்து. இலக்கியங்களில் இந்த நான்கு வகையும் மிகுதியாகக் காணப்பெறவில்லை. வழக்கு மொழியில் இருந்தாலும் மக்கள் அவ் வப்போது பேசி மறக்கும் பேச்சைப் போலன்றி அடிப்பட்ட வழக் காக இடந்தோறும் காலங்தோறும் பரவி நிற்பதால் அவற்றையும் ஒரு வகையில் இலக்கிய மதிப்புடையனவாகக் கருதியே தொல்காப் பியர் அவற்றைச் சொன்னர். அவர் காலத்துக்கு முன்பே இந்த ஆறையும் தனியாகப் பார்த்து வகை பண்ணினர்கள் புலவர்கள் என்பதை மொழிப' என்ற குறிப்பு உணர்த்துவதை முன்பு பார்த் தோம். பேராசிரியர், இவை எழுதப்பெறும் இலக்கியத்துக்குரிய இலக்கணம் என்று சொன்னலும், வழக்கு மொழியிலும் வழங்கும் என்பதையும் சொல்கிருர். அந்த அளவேனும் அவர் நாடோடி இலக்கியத்தை நினைவில் வைத்திருக்கிருர் என்பதை நாம் உளங் கொள்ள வேண்டும். பாமரர்களிடையே வாய் மொழியாக வழங்கும் இத்தகைய இலக்கிய வகைகளே மேல்நாட்டினர் பாமரர் இலக்கியம் (Folk. lore) என்று கூறுவார்கள். நாடோடிப் பாடல்கள், நாடோடிக் கதைகள், பழமொழிகள் முதலியவை அந்தப் பரப்பில் அடங்கும். இங்கே தொல்காப்பியர் ஆருகப் பகுத்துக் கூறியவற்றில் வழக்கு மொழியில் வழங்கும் நான்கில் மூன்று நாடோடி இலக்கிய வகை யையே சார்ந்தன. பிசி, முதுமொழி, குறிப்பு மொழி என்பன