பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மலை அருவி ஆத்திலேயும் குளத்திலேயும் வாய்க்கால்ஒ ரத்திலேயும் காத்திருந்து பொண்ணுகளைக் கலக்கி மயக்கலையோ ? பார்த்துப்பார்த்து அவங்களைப் பரியாசம் பண்ணலேயோ ஊத்துப்பக்கம் நீங்கள்போயி உட்கார்ந்து பார்க்கலையோ? மண்டை வறண்டவருக்கு மச்சினிச்சி மார்களாச்சு மண்வெட்டிப் பல்லருக்கு மாமியாரும் கிடைச்சுப்போச்சு. புண்ணுக்கும் புளியம்பிஞ்சும் மல்லாக்கொட்டையும் தின்னவருக்குக் கண்மணிஎங்கள்.அக்காகிட்டக் கணக்காச் சாப்பாடுமாச்சு. காட்டிலேபோய் மாடுமேச்சுக் கஞ்சிகுடித்த அத்தான் கட்டிலிலே மெத்தைபோட்டு இங்கேவந்து படுக்கனுமோ? - முன் பிறப்பி லேசெஞ்ச மோசமான வேலைக்காக இப்பிறப்பிலே எங்க அக்கா இப்படின் கவிக்கிருளே. அக்காளேக் கூட்டிக்கிட்டு வற்றுத சீர்பெற்றர். நாகரிகம் அவருக்கில்லே நாட்டுப்புற வழக்கத்திலே,