பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு ஆர் அடித்தார் : ஆராரோ ஆராரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. 1 ஆாடித்தார் அேழுக - கண்ணே உன்னே அடித்தவரைச் சொல்லி அழு. மாமன் உன்னே அடித்தாரோ - கண்ணே உன்னே மல்லிகைப்பூச் செண்டாலே ? விம்மிவிம்மி அழுகாதே கண்ணேே வீமனுடை மருமகளே. பாட்டிஉன்னே அடித்தாளோ-கண்ணே உனக்குப் பால்ஊற்றும் கையாலே ? 5 நீட்டிஉன்னே அடித்தாளோ - கண்ணே உனக்கு நெய்ஹற்றும் கையாலே ? நல்லம்மான் கொல்லேயிலே கண்ணே உன் புள்ளிமான் மேயுதம்மா. புள்ளிமானப் பிடித்துக்கட்டக்கண்ணே உனக்குப் புடிகயிறும் பொன்ேைல. ஆாங்காதே கண்ணுக்குக் - கண்ணே உனக்குத் துணங்குமஞ்சம் தான் இருக்கு. ஓங்காத கண்ணுக்குக் - கண்ணே உனக்கு ஊஞ்சல்கடடத் தான் இருக்கு, 10 அக்காள் அடித்தாளோ - கண்ணே உன் அருமையான கன்னத்திலே ? மச்சான் அடித்தானே - கண்ணே உன் மஞ்சள்தேய்த்த கன்னத்திலே : அண்ணன் உன்னை அடித்தானே - கண்ணேே அழுகிறதைப் பார்ப்பதற்கு ?.