பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மலே அருவி வில்லுகொண்டு வேட்டைக்குப்போய்க் - கண்ணே அங்க வேடரெல்லாம் வெலவெலக்க ஈட்டிகொண்டு காட்டுக்குப்போய் - மகாராசா மாட்டினராம் எட்டுப்புவி. மானுமரை தான் நடுங்க - மகாராசா மந்திரவாள் சுற்றிட்டாராம். சிறுபுலியும் கரும் புலியும் - மகாராசா சின்னபின்னம் செஞ்சுட்டாராம். முள்ளம்பன்றி குள்ளம்பன்றி கண்ணே முணுமுணுக்க முரட்டுப்பன்றி 15 காட்டுப்பன்றி மேட்டுப்பன்றி - மகாராசாவைக் கண்டோடிச்சாம் கானலிலே. wo---- °岛°6Q且一 ராரோ ஆரிரரோ - கண்ணே நீ ஆரிரரோ ஆராரோ. கரிசல்காட்டுப் புழுதியிலே - கண்ணோன் கதிரறுக்கப் போகையிலே கஞ்சிக் கலயங்கொண்டு - கண்ணோான் களத்துக்கிட்டப் போகையிலே அரிவாளைத்தான் இடுப்பில்வச்சு - கண்ணே நான் ஆடிப்பாடிப் போகையிலே வெற்றிலேயும் போட்டுக்கையைக் - கண்ணே நான் வீசிவீசிப் போகையிலே 5 சுருக்குப்பையைச் சொருகிக்கிட்டுக்-கண்ணே நான் சுற்றிமுற்றிப் பார்க்கையிலே - சாமைக்கதிர் அறுக்கையிலே - கண்ணே நல்ல சாால்மழை பெய்ததடி,