பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு - 241 மலேமேலேயும் பச்சைத்தண்ணி - கண்மணியே குழிக்குள்ளேயும் பச்சைத்தண்ணி, உயிர்கொடுப்பதும் பச்சைத்தண்ணி - கண்மணியே உயிர்எடுப்பதும் பச்சைத்தண்ணி. ஊருக்குள்ளே ஆறுபோகக் - கண்ணே அங்கே ஊராரெல்லாம் குளிக்கப்போகத் தென்கரையும் வடகரையும் - கண்மணியே திரண்டோடுதாம் பெரியவெள்ளம், 55 கரைமேலே படிப்படியாய்க் - கண்மணியே கல்கட்டடம் கட்டியிருக்கும். வடகோடி மூலையிலே - கண்மணியே வடபத்ரகாளி கோயில்ஒண்ணு. ஆண்களும் பெண்களும் - கண்மணியே அயஅாரு ஆளுகளும் பத்ரகாளி கோயிலுக்குக் கண்மணியே பயபக்தியாய்ப் போவார்களாம். தெற்கத்திக்காற் றடிக்கையிலே - கண்மணியே திரும்பிவீடு போவார்களாம். 60 தென்கோடி மூலையிலே - கண்மணியே திருவாழத்தான் வீடிருக்கு. ராசாமகள் குளிப்பதற்குக் - கண்மணியே நாஅமூலைக் கட்டிடமாம். பத்துமுழத்துக் கொருவரிசை கண்மணியே படிகளெல்லாம் பளிங்குக்கல்லாம். பாதம்ரெண்டும் வலிக்காமே - கண்மணியே தாதிப்பெண்கள் தாங்கிவர வெயிலடித்து வேர்க்காமே - கண்ணே அவள் வெண்சாமரை வீசிவர. 65 16 -