பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆராய்ச்சி உரை கணம்கெழு கடவுட் குயர்பலி தூஉய் பரவினம் வருகம் சென்மோ, தோழி' என்பது நெய்தல் கிலத்துத் தலைவியின் கூற்று. நெய்தல் நிலத்தில் ஊசலாடும் மகளிர் அதற்குரிய பாடல் களைப் பாடுகிருர்கள். - சேயுயர் ஊசற்சீர் நீஒன்று பாடித்தை." கலித்தொகையில் மடலேற்றத்தைப் பற்றிய செய்தி வரும் பாடல்களால், மடலால் குதிரை பண்ணி ஊர்ந்து வரும் ஆடவன் பாடுவதுண்டு என்ற செய்தி தெரிய வருகிறது. - " என்னனும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே ஆடெனின் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ. "அணி நிலப் பெண்ணே மடலூர்த் தொருத்தி அணிநலம் பாடி வரற்கு' வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட." y 15 பின் வந்த நூல்கள் சங்க காலத்து நூல்களுக்குப் பின் எழுந்த காப்பியங்களிலும் பிற நூல்களிலும் இவ்வாறு அவ்வத் திணையில் வாழும் மக்கள் தத்தமக்கு உரிய வகையில் பாடுவதாக வரும் இடங்கள் பல. - பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர்." ' கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலிற் - கன்று றக்கும் குரவை." . . . என்பன போலப் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டலாம். மேலே கூறிப் போந்தவற்றிற் குறிப்பிக்கப்பெறும் பாடல்கள் யாவும் நாடோடிப் பாடல்களே. இத்தகைய பாடல்களில் நெஞ் சைப் பறிகொடுத்ததாகப் பாரதியார் குயிற் பாட்டில் பாடுகிரு.ர். ஏற்றதிர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும் - கோற்ருெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம்இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் o பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் -- ੱਜੜ੍ਹਾਂ 2. கலி. 181:24, 6. கம்ப. நாட்டுப், 10. 8. கலி. 140 -18-4, 7. கம்ப. நாட்டுப், 34 4. கலி. 141 : 5-6.