பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மலே அருவி அந்திபட்டோ செத்தசவம் - நீங்கள் ஆக்கிஉண்டு வந்தியளோ ? பொழுதுபட்டோ செத்தசவம் - நீங்கள் பொங்கிஉண்டு வந்தியளோ ? ஊரும் இரண்டாச்சோ - உங்களுக்கு ஊடே கடலாச்சோ நாடும் இரண்டாச்சோ - உங்களுக்கு நடுவே கடலாச்சோ ? அறிந்திருந்தும் வந்தியளோ அறிவுகெட்ட மானிடரே கேட்டிருந்தும் வந்தியளோ கேடுகெட்ட மானிடாே ? காகம் பறக்கவில்லை - எங்களுக்குக் கண்டவர்கள் சொல்லவில்லை தேகம் பறக்கவில்லை - எங்களுக்குத் தெரிந்தவர்கள் சொல்லவில்லை. கேட்டுவாய் கேட்டுநாங்கள் கேட்டறிந்து வந்தோமே ஊர்வாயைக் கேட்டுநாங்கள் ஒடிஓடி வந்தோமே ! சிவன் இருக்கையிலே - ஒேரு சீட்டெழுதி விட்டாயில்லே ஆவி பிரியுமுந்தி - ஒேரு ஆளனுப்பி விட்டாயில்லை. கத்திரிக்காய் விற்ற இடத்தில் - ஒரு கரையூரான் சொன்னனடி பூசணிக்காய் விற்ற இடத்தில் - ஒரு புத்துாரான் சொன்னனடி. அருவிப் புலத்திலோான் - ஆளோசை கேட்டுவந்தேன் குருவிப் புலத்திலேகான் குரலோசை கேட்டுவந்தேன்.


سمي سيم