பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆராய்ச்சி உரை நல்ல கரும்பு கட்டுக் கட்டா நயமா விக்குதுபார்-ராசாத்தி நயம விக்குதுபார்! என்பவற்றில் ஒரே அடி மீட்டும் மீட்டும் மடக்கி வருகிறது. ஆண் பெண் தர்க்கம்' என்ற பிரிவில், அன்னமே பொன்னம்மா - கண்ணிரண்டும் சோருதடி அன்னமேஎஏ என்பதும், வாது செய்யாதடா வந்தவழி போய்ச் சேரடாஆஆ" என்பதும் மாறி மாறி வந்துகொண்டே யிருக்கின்றன. இப்படி வருவன பல. . . 6. பலவகைப் பாடல்கள் மலையிலிருந்து கங்குகரையின்றி அணைப்பார் தடுப்பாளின்றி வேகமாக வீழும் அருவியைப் போலப் பாமர மக்களிடையே உணர்ச்சியும் இசையும் இணையப் பெருகி உலவும் காடோடிப் பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதிக்கு மலேயருவி என்ற பெயர் புதியதாக அமைத்துக் கொண்டது. இதில் பதின்மூன்று வகை யாகப் பிரித்த பகுதிகள் அடங்கியிருக்கின்றன. கிராமங்களில் உள்ள மக்கள் பல பாடல்களைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவற்றை ஒருவர் பாடுவதும் அதற்கு எதிர்ப் பாட்டுப் பாடுவதும் வழக்கம். பந்தயம் வைத்துக்கொண்டு பாடுவதும் அதில் தோற்ருல் சிறுமையுறுவதும் உண்டென்று தெரிகிறது. . - பாட்டுக்குப் பாட்டறிவேன்-குட்டி பலபாட்டு தான்.அறிவேன் எதிர்ப்பாட்டுப் பாடாவிட்டால்-நாக்கை - இழுத்துப்பிடித் தறுத்திடுவேன். என்பதளுல் இந்த வழக்கத்தை உணரலாம். பாடுறேண்டி உன்மேலே-குட்டி பஞ்சவர்ணக் கிளியே பொண்னே' 1. ம8ல், ப. 45. – 3. បីក្លី – 2. Lestko, 59. . . . 4. L. 11:58, .