பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகைப் பாடல்கள் 39 என்பதனுல் ஆடவன் பெண்களேப் புகழ்ந்து பாடுவது ஒருவகை என்று புலனாகும். அப்படிப் பாடுகிறவன் பாடினல் அதைக் கேட்டு மகளிர் ஆடுவது உண்டு. பாட்டுக்காரன் தாண்டிஅவன்-ஏலங்கிடி லேலோ பாடப் பாட ஆடலாண்டி-ஏலங்கிடி லேலோ.' அவ்வாறு பாடும் பாடல்களில் ஏலேலங்கிடிப் பாட்டு, தில்லா லங்கிடிப் பாட்டு, கள்ளன் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, வண்டிக் காரன் பாட்டு என்று பலவகை உண்டு. ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி.ஏலங்கிடி லேலோ எடுப்போ மையா கருத்தா நாற்றை.ஏலங்கிடி லேலோ தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி-ஏலங்கிடி லேலோ திருப்பித் திருப்பி நடுவோமையா-ஏலங்கிடி லேலோ கள்ளப்பாட்டையும் கலந்து பாடி-ஏலங்கிடி லேலோ நல்ல மனசா நடுவோமையா.ஏலங்கிடி லேலோ தெம்மாங்குப் பாட்டுப் பாடி.ஏலங்கிடி லேலோ : - கம்மால் பண்ணவே மாட்டோ மையா-ஏலங்கிடி லேலோ வண்டிக்காரன் பாட்டுப் பாடி-ஏலங்கிடி லேலோ வழிவிலக மாட்டோ மையா-ஏலங்கிடி லேலோ" என்னும் இடத்தில் அந்த்ப் பாட்டுக்களைப் பற்றித் தொழில் செய் யும் பெண்கள் சொல்லுகிருர்கள். திருடகை நடித்துப் பாடும்போது பாடுவது கள்ளப் பாட்டு. அதைப் பற்றிய பேச்சுப் பின்னும் இரண்டு இடங்களில் வருகிறது. கள்ளப் பாட்டுக் கற்றுக் கொண்டு கணக்கா வந்தேனே-கன்னக்கோலேக் கையில் எடுத்தேனே-கட்டிடத்தை நாசம் செய்தேனே." மான மதுரை மகராஜன் ராத்திரி ஒருமனி தேட்டைஎன்னக்கண்டு. - சிரிக்குது மூட்டைவாயெடுத்துப் - படிப்பனே பாட்டை." - . . . . . . . * , , தெம்மாங்கு என்பது ஒருவகைப் பாட்டு. அதைப் பற்றிப் பிறிதோரிடத்தில் நான் எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதியை இங்கே கொடுப்பதில் தவறில்லையென்று எண்ணுகிறேன். 1, d. 134: 93, 3. c. 192: 3, 2. L, 146 : 55–9. . 4. L. 193: 8, .