பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆராய்ச்சி உரை முத்திடிச்சு மாக்கொழித்து முற்றமெல்லாம் கோலமிட்டு அலங்காரம் செய்கிறதைச் சொல்கிறது ஒரு கண்ணி. காட்டுக் கரும்பே-கண்ணே கணுவில்லாச் செங்கரும்பே வேலிக் கரும்பே.கண்ணே விலையில்லா மாணிக்கமே!’ என்ற கண்ணியில் அருமைப்பாடு எவ்வளவு சிறப்பாக ஒலிக்கிறது! மாமன் பரிசு, நோயும் மருந்தும் என்ற இரண்டுக்கும் பின், துங்கு என்ற தலைப்பில் சில நல்ல கண்ணிகள் வருகின்றன. கொட்டிவைத்த முத்தே குவித்துவைத்த ரத்தினமே கட்டிப் பசும்பொன்னே கட்டிமுத்தம் கொடுப்பாயே! என்பதில் வாத்ஸல்ய பாவம் நன்ருகப் பொருந்தியிருக்கிறது. ஆற்று வருணனைத் தாலாட்டு அடுத்தபடி வருகிறது. ஆறு தலைமுடிபோல் ஒடுகிறது. ஆற்றுக்குப் பாலம் இருக்கிறது. தண் ணிரைப் பலர் எடுக்கிருர்கள். இங்கே தண்ணீரின் பெருமையைப் பல கண்ணிகளில் தாய் சொல்லுகிருள். தண்ணிருக்கு ஒரு தீட்டும் இல்லை; தடுப்பார் யாரும் இல்லை. எல்லாச் சாதிக்கும் அது உரியது. தோட்டி முதல் தொண்டைமான் வரை அதைத் தொழுகிருர்கள். சில சமயங்களில் அது சண் டைக்குக் காரணமாகிறது. மலைமேலும் குழியின் கீழும் இருப் பது அது. உயிர்கொடுப்பதும் பச்சைத்தண்ணி உயிர்எடுப்பதும் பச்சைத்தண்ணி." ஆற்றங்கரையில் கோயில் இருக்கிறது. கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பி வீட்டுக்குப் போகிருர்கள் மக்கள். தென்னங் கீற்று வேய்ந்த சில வீடுகள் இருக்கின்றன. அருகே பல தென்ன மரங்கள் உள்ளன. இங்கே தென்னமரத்தைப் பற்றிப் பல செய்திகள் வருகின்றன. தோட்டம் வைத்ததையும் வீடு கட்டின கதையையும் இரு வேறு பாடல்கள் தெரிவிக்கின்றன. - - 1 930, 7.П9 р. 231 : 19, 20. 3, с. 2иї 58.